1
1‘இன்னம்
கொடுப்பாயோ?’ என்று கேடாகவே நினைத்திருக்கிறது இவர்? மா மழை மொக்குளின் - பெருமழைக்
குமிழி போலே. 2‘தண்ணீரில் தோன்றுகிற குமிழிக்குச் சமம்’ என்றார் பிறரும்.
‘பின் விழுந்த துளியோடே நசிக்கும்,’ என்பார், ‘மாமழை’ என்கிறார். மாய்ந்து மாய்ந்து
- அழிந்து அழிந்து. ஆழ்ந்தார் என்று அல்லால் - உயிர் வாழ்கின்ற நாள்களில் செய்த பாபத்தாலே
கீழான கதியில் வீழ்ந்து தறைபடுமது ஒழிய. அன்று முதல் இன்று அறுதியா வாழ்ந்தார்கள் வாழ்ந்தே
நிற்பர் என்பது இல்லை - படைப்புக்காலம் தொடங்கி இற்றை அளவும் அவர்கள் வாழ்ந்தவர்கள்
ஒருபடிப்பட வாழ்ந்தே போந்தார்கள் என்னும் இந்தத் தன்மைதானும் முதலில் இல்லை.
நிற்க உறில் -
நிலை நின்ற பேற்றினைப் பெறவேண்டி இருந்தீர்களேயாகில். ஆழ்ந்து ஆர்கடல் பள்ளி அண்ணல் -
ஆழ்ந்து பரந்த கடலைப் படுக்கையாகவுடைய சர்வேசுவரன். திருமேனியின் சௌகுமார்யத்துக்குத் தகுதியாக
உறுத்தாதபடியான ஆழத்தையுடைத்தாய், திவ்ய அவயவங்களைப் பரப்பிக்கொண்டு கண்வளர்கைக்குத் தகுதியான
பரப்பையுடைத்தாய் இருக்கின்றமையைத் தெரிவிப்பார், ‘ஆழ்ந்து ஆர்’ என்கிறார்.
‘திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறது கர்மத்திற்குக் கட்டுப்பட்டவனாய் அல்லவே? நம்மால்
பற்றப்படுமவன் ஆகைக்காக அன்றோ? ஆன பின்னர், அவன் நினைவோடே சேரச் சொரூபத்திற்குத் தகுதியான
பேற்றினைப் பற்றுங்கோள்,’ என்பார், ‘கடற்பள்ளி அண்ணல்’ என்கிறார். அடியவர் ஆமினோ
- அவன் தலைவனாயிற்ற பின்பு நீங்கள் உங்கள் அடிமையை இசையப் பாருங்கோள். அன்றிக்கே,
அடிமை அல்லாதது ஒரு பொருளை இன்று அடிமை ஆக்கிக்
_____________________________________________________
1.
திருவாய்மொழி,
6. 9 : 8.
‘அறிவி லேனுக்கு அருளாய்
அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி!
அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப்
புறத்திட்டு இன்னம் கொடுப்பாயோ
பிறிதொன்று அறியா
அடியேன் ஆவி திகைக்கவே?’
என்பது அத்திருப்பாசுரம்.
2. ‘தண்ணீரிலே தோன்றுகின்ற
குமிழிக்குச் சமம்’ என்றது, ஒரே காலத்தில்
தோன்றி அழிவதற்கு எடுத்துக்காட்டு.
|