முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
273

ஏழையேன் - 1அஃது ஒன்று இல்லை. இவர்தம் ஆசையே உள்ளது. 2ஆழ்வான் பணித்த வரதராஜஸ்தவத்திலே ஒரு சுலோகத்தைக் கேட்டு, எம்பெருமானார், ‘இப்பாசுரங் கேட்டால் பெருமாள் இரங்காமை இல்லை; ஆழ்வான், உன்முகத்தைக் காட்டிக்காணாய்,’ என்று பார்த்தருளினார்.

(5)

404

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான்,
    யான்எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை;
    நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும்
    அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய்
    நின்னை அறிந்துஅறிந்தே.

    பொ-ரை : ‘என்னுடைய சரீரத்தினுள்ளும் உயிருக்குள்ளும் அவையல்லாத இந்திரியங்களுக்குள்ளும் ஒன்றையும் விடாமல் எல்லா இடங்களிலும் எப்பொழுதும் அந்தராத்துமாவாய் நிற்கின்றவனே! உன்னை அறிந்திருந்தும், இனிமையான வடிவையுடைய உன்னைக் காணும்பொருட்டுப் பலகாலும் பார்த்து, யான் என் மனத்திற்குள்ளே ஆசைப்படாநின்றேன்; அறிவு இல்லாமையாலே,’ என்கிறார்.

    வி-கு : ‘நின்னை அறிந்து அறிந்து உன்னைக் காண்பான் நோக்கி நோக்கி எனது ஆவியுள்ளே நாக்கு நீள்வன்; என்?’ எனில், ஞானம் இல்லாமையாலே,’ என முடிக்க. ‘நாள்தோறும் நின்றாய்’ என்க.

_____________________________________________________

1. அஃது - அவன் நினைவு.

2. கிடையாததிலும் ஆசை செல்லுவதற்குச் சம்வாதம் காட்டுகிறார், ‘ஆழ்வான்’
  என்று தொடங்கி. என்றது, எம்பெருமானார், ஆழ்வானுக்கு வந்த ஆபத்தைக்
  கண்டு திருவுள்ளம் மிகவும் புண்பட்டு ஆழ்வானைப் பார்த்தருளி,
  ‘ஆழ்வான்! நான் உம்மை இப்படிக் காணச் சகியேன்! ஸ்வரூப
  விருத்தமானாலும் ஆயிடுக! நீர் பெருமாள் சந்நிதியிலே சென்று தோத்திரம்
  பண்ணி நம் அபீஷ்டத்தைப் பெற்று வாரீர்,’ என்ன, இவரும் சென்று
  தோத்திரம் பண்ணி மீண்டு எழுந்தருள, ‘இரங்கியருளினாரோ?’ என்று
  கேட்டருள, ‘இரங்கியருளினார் இலர்’ என்று விண்ணப்பம் செய்ய,
  ‘உம்முடைய அபேக்ஷை தோன்ற விண்ணப்பம் செய்தீரோ?’ என்ன,
  ‘அப்படியே விண்ணப்பம் செய்தேன்’ என், ஆனால், அதிலே ஒரு சுலோகம்
  சொல்லீர்’ என்று அதனைக் கேட்டருளி, ‘இப்பாசுரம் கேட்டால் பெருமாள்
  இரங்காமை இல்லை; ஆழ்வான்! முகத்தைக் காட்டிக்காணாய்’ என்று
  பார்த்தருளினாராம் என்பது. இது, சாபலத்தின் மிகுதியேயன்றோ? பக். 147.
  குறிப்புப் பார்க்க.