ந
நாள்தோறும் - எப்பொழுதும்.
‘நாள்தோறும் நாக்கு நீள்வன்’ எனக் கூட்டலுமாம். நாக்கு நீளுதல் - ஆசைப்படுதல்.
ஈடு :
ஆறாம் பாட்டு. 1‘என் பக்கலிலே எப்பொழுதும் உடனிருப்பவனாய் இருந்தே உன்னைக்
காட்டாதொழிகிறது நீ நினையாமை என்று அறிந்து வைத்தே, காண ஆசைப்படாநின்றேன்; அதற்குக் காரணம்,
என் அறிவு கேடு,’ என்கிறார்.
நோக்கி நோக்கி
- அடுத்து அடுத்து அவன் வரும் திசையையே பார்ப்பார் ஆயிற்று. ‘இப்படிப்பார்ப்பது என்ன பிரயோசனத்துக்கு?’
என்னில், உன்னைக் காண்பான் - உன்னைக் காண வேண்டும் என்னும் நசையாலே. யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன் - என் மனத்திலே ஆசைப்படாநின்றேன். ‘வாய் விட்டுச் சொல்லமாட்டாமல்’ என்பார்,
‘எனது ஆவியுள்ளே’ என்கிறார். ஒரு விஷயத்திலே ஆசையுள்ளவனை ‘இவன் இவ்விஷயத்திலே நாக்கு
நீட்டாநின்றான்,’ என்பார் அன்றோ? ஆதலால், ‘நாக்கு நீள்வன்’ என்பது, ‘ஆசைப்படுவன்’ என்னும்
பொருளைக் காட்டாநின்றது. ‘ஆசைப்படுவதற்குக் காரணம் என்?’ என்னில், ஞானம் இல்லை - இது
இருந்தபடியால் என்னைப் போன்ற அறிவு கேடர் இலர். ‘சர்வேசுவரனைக் காண வேண்டும் என்று ஆசைப்படுகிற
இது அறிவு கேடாக வேண்டுகிறது என்?’ என்னில், என்னுடைய ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி எங்கும் நாள்தோறும் நின்றாய் - 2உன்னைப் பெறுவதற்குத் தடையாக
உள்ள என் சரீரத்திலும், பெற இருக்கிற ஆத்துமாவிலும், இவை ஒழிந்த தடையாய் உள்ள உறுப்புகளிலும்
விடாதே எங்கும் எல்லாக்காலத்திலும் புக்கு நின்றாய். 3கிழிச் சீரையிலே
தனம் கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப்போலே காணும் இவர் படி.
_____________________________________________________
1. ‘நின்னை அறிந்து அறிந்தே,
நாக்கு நீள்வன், ஞானமில்லை’ என்பதனைக்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. சரீரம், புண்ணிய பாப
கர்ம மூலமாகையாலே, அதனை நோக்கி, ‘உன்னைப்
பெறுவதற்குத் தடையாகவுள்ள என் சரீரம்’ என்கிறார்.
3. ‘நீக்கமின்றி
எங்கும் நின்றாய், உன்னைக் காண்பான், நாக்கு நீள்வன்,’
என்றதற்கு வியாக்கியாதா தம் அபிப்பிராயமாக
அருளிச்செய்கிறார்,
‘கிழிச்சீரையிலே’ என்று தொடங்கி. கிழிச்சீரை - பணப்பை.
|