|
ந
நின்னை அறிந்து
அறிந்து - ‘இதன் 1பாதுகாவலுக்குச் சம்பந்தம் உடையன் ஆவது, நிதானமறிந்து பரிஹரித்தற்கு
முற்றறிவினன் ஆவது, தொடங்கினது முடிக்க வல்ல எல்லா ஆற்றலையுமுடையன் ஆவது, ‘ஐயோ!’ என்று இரங்குகைக்கு
நீர்மையுடையன் ஆவது, எப்பொழுதும் உடனிருத்தலையுடையனாவது; இப்படியிருக்க, ‘இவன் முகங்காட்டாதொழிகிறது,
செய்ய நினையாமையே அன்றோ?’ என்று இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனையே அன்றோ?
2அன்றிக்கே, ‘நான் சம்பந்தம் உள்ளவனாய் நீ சம்பந்தம் இல்லாதவனாய்
இருக்கிறாய் அல்லை; நான் முற்றறிவினனாய் நீ அறிவு இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான்
எல்லா ஆற்றலையும் உடையவனாய் நீ ஆற்றல் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எங்கும்
பரந்திருப்பவனாய் நீ அணுவாய் இருக்கிறாய் அல்லை; இத்தலை நோவுபட விட்டு அருள் அற்றவனாய்
இருக்கிறாய் அல்லை; ‘உடையவனாய் வைத்து உடைமை நோவுபட விட்டிருக்கிறது செய்ய நினையாமையே அன்றோ?’
என்று ஆறி இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனை அன்றோ?’ என்னுதல்.
(6)
405
அறிந்துஅ றிந்து,
தேறித் தேறி,
யான்எனது
ஆவியுள்ளே
நிறைந்த ஞான
மூர்த்தி யாயை
நின்மல மாகவைத்து,
பிறந்தும் செத்தும்
நின்றுஇடறும் பேதைமை
தீர்ந்தொழிந்தேன்
;
நறுந்து ழாயின்
கண்ணி அம்மா!
நான்உனைக்
கண்டுகொண்டே.
_____________________________________________________
1. இத்திருவாய்மொழியில்
வந்துள்ள ‘நாராயணனே’ என்றதனை நோக்கிச்
‘சம்பந்தமுடையனாவது’ என்றும், ‘ஞானமூர்த்தி’ என்றதனை
நோக்கி,
‘முற்றறிவினனாவது’ என்றும், ‘துப்பனே’ என்றதனை நோக்கி,
‘ஆற்றலையுடையனாவது’ என்றும்,
‘ஞாலமுண்டாய்’ என்றதனை நோக்கி,
‘நீர்மையுடையனாவது’ என்றும், ‘நீக்கமின்றி எங்கும் நின்றாய்’
என்றதனை
நோக்கி, ‘உடனிருத்தலையுடையனாவது’ என்றும் அருளிச்செய்கிறார்.
2. வேறே
ஒரு வகையாகவும் கருத்து அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’ என்று
தொடங்கி.
|