முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
279

என

என்றபடி. நறுந்துழாயின் கண்ணி வேந்தே - வைத்த வளையத்தைக் காட்டி அவ்வடிவிலே குருகுலவாசத்தைப் பண்ணுவித்து அறிவு பிறப்பித்தாயிற்றுத் தனக்கு ஆக்கிக் கொண்டது. 1இவ்வறிவு பிறக்கைக்கு அவன் இட்ட பச்சை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி. நான் உன்னைக் கண்டுகொண்டு - உன் இனிமையை அறிந்த நான், எல்லையற்ற இனியனான உன்னைக் கண்டுகொண்டு. ‘நறுந்துழாயின் கண்ணி அம்மா! நான் உன்னைக் கண்டுகொண்டு, அறிந்து அறிந்து தேறித் தேறி யான் எனது ஆவியுள்ளே நிறைந்த ஞானமூர்த்தியாயை நின்மலமாக வைத்து, பிறந்தும் செத்தும் நின்று இடறும் 2பேதைமை தீர்ந்தொழிந்தேன்! இது நான் பெற்ற அளவு,’ என்கிறார்.

    (7)

406

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின்திருப் பாதங்கள்மேல்
எண்தி சையும் உள்ள பூக்கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ்கடல் ஞாலத்துள்ளே
வண்து ழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.

    பொ-ரை : ‘வாசனை பொருந்திய திருத்துழாய் மாலையைத் தரித்த தலைவனே! உன்னைப் பார்த்துக்கொண்டு என் கைகளின் உறாவுதல் தீரும்படியாக உன் அழகிய திருவடிகளின்மேல் எட்டுத் திசைகளிலுமுள்ள மலர்களைக் கொண்டு தூவித் துதித்து மகிழ்ந்து மகிழ்ந்து தொண்டராகிய யாங்கள் பாடி ஆடும்படியாகக் கடல் சூழ்ந்துள்ள இவ்வுலகத்திற்குள் வருகின்றாய் இல்லையே!’ என்கிறார்.

    வி-கு : ‘தொண்டரோங்கள் பாடி ஆடச் சூழ்கடல் ஞாலத்துள்ளே வந்திடகில்லாயே!’ என்க.

    ஈடு : எட்டாம் பாட்டு. 3மேல் திருப்பாசுரத்தில் பெற்ற அமிசம் சொன்னார்; ‘பெறாத அமிசம் இது’ என்கிறார் இத்திருப்பாசுரத்தில்.

_____________________________________________________

1. ‘இவ்வறிவு பிறந்தமைக்கு’ என்று தொடங்கும் வாக்கியம், ரசோக்தி. ‘பச்சை’
  என்றது, சிலேடை : திருத்துழாய் என்பதும், உபகாரம் என்பதும் பொருள்.

2. இத்திருப்பாசுரம் எச்சமாய்க் கிடக்கிறது; அதாவது, ‘பேதைமை
  தீர்ந்தொழிந்தேனித்தனை; மார்பும் மாலையுமான வடிவழகைக்
  கண்ணிட்டுக் காணப் பெற்றிலேன்,’
என்பது எச்சம்.

3. ‘வந்திடகில்லாயே’ என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.