த
தாமரை போன்ற பாதங்களை
அடைவதனாலே பிறவியின் பயனை அடைந்தவனாகக் கடவேன்,’ என்பதனைக் கேட்ட ஆளவந்தார்,
‘வார்த்தை அழகியது! வகுத்த விஷயத்திலேயாகப் பெற்றிலோம்,’ என்று அருளிச்செய்தார்.
எண் திசையும் உள்ள
பூக்கொண்டு - விஷயத்திற்குத் தகுதியாகவும் தம்முடைய ஆசைக்குத் தகுதியாகவும் இருக்க வேண்டுமாதலின்,
‘எண் திசையும் உள்ள பூ’ என்கிறார். 1தம்முடைய ஆசைக்குத் தகுதியாக
‘ஆசையில் உள்ளவை எல்லாம் வேண்டும்,’ என்கிறார். அவ்வாசைதான் திக்குப்பட்டே அன்றோ
இருப்பது? கலியர் ‘கல அரிசிச்சோறு உண்ண வேண்டும்,’ என்னுமாறு போன்று. இங்ஙனமே அன்றோ கைங்கரிய
ருசியுடையார் வார்த்தை இருப்பது? 2‘நான் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’
என்றாரே அன்றோ இளைய பெருமாள்? உகந்து உகந்து - பிரீதி மாறாதே செல்லும்படியாக. தொண்டரோங்கள்
-இந்தக் கைங்கரியத்தில் இனிமை அறிந்த நாங்கள். 3‘கேசவன் தமர்’க்குப் பின்
தனியர் அல்லராதலின், ‘தொண்டரோம்’ என்கிறார். பாடிஆட -பிரீதியினாலே தூண்டப்பட்டவர்களாகிப்
பாடுவது ஆடுவதாம்படி. ‘இதுவாயின், 4முன்பே நாம் செய்வதாக இருந்தது ஒன்றே அன்றோ?
இந்தச் சரீர சம்பந்தம் அற்றால், ஒரு தேச விசேடத்தில் கொண்டுபோய், 5‘மேலே
சொல்லப் போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறான்’ என்னும்படி பண்ணுகிறோம்,’ என்ன,
‘அதுவோ நான் விரும்புகிறது? அன்று; இங்கேயே,’ என்கிறார் மேல் :
சூழ் கடல் ஞாலத்துள்ளே
- கடல் சூழ்ந்த இவ்வுலகத்துள்ளே நான் காண வரவேண்டும். என்றது, ‘எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும்
விடாய் தீர்க்க ஒண்ணாது என்கிறார்’
_____________________________________________________
1. ‘ஆசை’ என்பது, சிலேடை
: ஆசையும் திக்கும் என்பது பொருள்.
‘திக்குப்பட்டேயன்றோ’ என்றது, ‘எண்திசையும்’ என்றதனைத்
திருவுள்ளம்
பற்றி. அவ்வாசை - அந்தத்திக்கு.
2. ஸ்ரீராமா. அயோத்.
31 : 25.
3. ‘கேசவன் தமர்’ என்ற
திருவாய்மொழி பாடியதற்குப் பிறகு என்றபடி. இது
‘திருவாய்மொழி, 2 : 7. 1.
4. ‘முன்பே’ என்றது,
‘பொய்ந்நின்ற’ என்ற திருப்பாசுரத்தைப் பாடிய போதே
என்றபடி.
5. தைத்திரீய
பிரு. 10.
|