எங
எங்கே காணக் கடவேன்?
1யசோதைப்பிராட்டி கையும் வெண்ணெயுமாகப் பிடித்துக்கொண்டாற்போலே, கையும் நெய்யார்
ஆழியுமாகப் பிடித்துக்கொள்ளவாயிற்று இவர் ஆசைப்படுகிறது.
(9)
408
சக்கரத்து அண்ணலே!
என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி
நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தி
யாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்க
ளாலே கண்டு தழுவுவனே.
பொ-ரை :
‘சக்கரத்தையுடைய சுவாமியே!’ என்று சொல்லி அனுபவிக்கப் பெறாமையாலே கீழே விழுந்து கண்களில்
நீர் மிகும்படி சுற்றும் பார்த்து நின்று வருந்தினேன்; பாவத்தைச் செய்த நான் காணப் பெறுகின்றிலேன்;
மேம்பட்ட ஞானத்தையே உருவமாக உடையவனும் வேதமாகிற விளக்காலே காணப்படுகின்றவனுமான எந்தையை
எனக்குத் தகுதியான ஞானமாகிற கண்களாலே கண்டு தழுவுவேன்,’ என்பதாம்.
ஈடு :
பத்தாம் பாட்டு. 2‘காணப் பெறாவிட்டால், மறந்து பிழைக்க ஒண்ணாதபடி எனக்குத்
தக்கது ஒரு ஞானக்கண் எங்ஙனே உண்டாயிற்று?’ என்கிறார்.
சக்கரத்து அண்ணலே
என்று தாழ்ந்து - ‘திருவாழியைக் காட்டி என்னை எழுதிக்கொண்டவனே!’ என்று இவ் வார்த்தையோடே
தரைப்பட்டு. கண் நீர் ததும்ப - கண்கள் நீர் மிகைக்கும்படி. 3இவருடைய துக்கத்தின்
எல்லை காண்பது கண்ண நீரிலேகாணும். பக்கம் நோக்கி நின்று
_____________________________________________________
1. ‘சக்கரத்து அண்ணலை’
என்று அருளிச்செய்கையாலே ஒரு கருத்து
அருளிச்செய்கிறார், ‘யசோதைப்பிராட்டி’ என்று தொடங்கி.
இந்தக்
கருத்திற்குக்காரணம், ‘ஆனாயர், தாயவனேயென்று தடவும் என் கைகளே’
என்ற பாசுரப்பகுதி.
2. ‘கண்டு தழுவுவன்’ என்கையாலே,
பிரீதி தோன்றினாலும், பிரகரணத்திற்கு
உசிதமாக இன்னாப்பாக அவதாரிகை அருளிச்செய்கிறார்,
‘காணப்பெறாவிட்டால்’ என்று தொடங்கி.
3. மேலேயுள்ள
பதத்தையும் கூட்டி பாவம் அருளிச்செய்கிறார், ‘இவருடைய’
என்று தொடங்கி.
|