1க
1கழுத்துக்கட்டியாய்விட்டன,’
என்றபடி. 2‘மறந்து பிழைக்க ஒண்ணாதபடி எனக்குத் தக்காற்போலே ஒரு ஞானமும் வேண்டுமோ?’
என்கிறார்.
(10)
409
தழுவி நின்ற காதல்
தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென்குருகூர்
மாறன் சடகோ பன்சொல்
வழுவி லாத ஒண்த
மிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார்
வைகுந்தம் ஏறுவரே.
பொ-ரை :
‘கூட்டங்கூட்டமான மாடங்களையுடைய அழகிய திருக்குருகூரில் அவதரித்த மாறன் சடகோபராலே, தம்மைத்
தழுவிக் கொண்டு நிற்கின்ற காதலால், தாமரை போன்ற கண்களையுடைய சர்வேசுவரனைப் பற்றி
அருளிச்செய்யப்பட்ட குற்றம் இல்லாத பிரகாசம் பொருந்திய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப்
பத்துத் திருப்பாசுரங்களையும் மனம் பொருந்தப்பாடி ஆட வல்லவர்கள் பரமபதத்தை அடைவார்கள்,’
என்றவாறு.
வி-கு :
‘சடகோபன் தாமரைக் கண்ணனைக் காதலால் சொல் தமிழ்கள் ஆயிரம்’ என்க. தமிழ்கள் - திருப்பாசுரங்கள்.
‘வல்லார் ஏறுவர்’ என்க.
ஈடு :
முடிவில், 3‘இத்திருவாய்மொழி கற்றார் எம்பெருமானோடே எப்பொழுதும் சேர்ந்திருக்கலாம்படியான
திருநாட்டிலே செல்லப்பெறுவர்,’ என்கிறார்.
தழுவி நின்ற காதல்
தன்னால் - ‘நான் விடுவேன்’ என்றாலும் விட ஒண்ணாதபடியாய் உடன் வந்தியான அளவு கடந்த காதலாலே.
தாமரைக்கண்ணன்தன்னை - இந்தக் காதலுக்குக் கிருஷி பண்ணின -4நேத்திரபூதரைச்
சொல்லுகிறார்.
_____________________________________________________
1. கழுத்துக் கட்டி - கழுத்தைக்
கட்டுவது; ‘பாதகம்’ என்றபடி. அதாவது, ‘கண்டு
அனுபவிக்கவும் ஒட்டாது, மறந்து பிழைக்கவும் ஒட்டாது,’
என்றபடி.
2. மேலே கூறியதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘மறந்து’ என்று தொடங்கி.
3. ‘வைகுந்தம் ஏறுவரே’
என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
4. ‘நேத்திர
பூதர்’ என்றது, சிலேடை : ‘அந்தரங்கரை’ என்பதும்,
‘கண்ணானாரை’ என்பதும் பொருள்.
|