த
திரிந்தவன், நாழி அரிசி
பெற்று வாழப்புக்கவாறே ஒரு வெள்ளாட்டியையும் சம்பாதித்து,
‘முதலியார்’
என்னவும் பண்ணி,
‘அடிசில் உண்ணாநின்றார்’
என்னவும் பண்ணும். ஆர்ந்த பின் - கண்டது அடைய இட்டு வயிற்றினை நிரப்பி,
உதிரம் குடித்து வாய்விட்ட
அட்டை போலே
பெயரவும் திரியவும் மாட்டாதே கிடந்து புரளாநிற்குமே? அவ்வளவிலே இவனிடத்தில் அன்புடையார்களாய்
இருப்பார் பெண்டுகள் சிலர் வந்து, ‘உடம்பு பதர் போலே இருந்தது ; இதுகொண்டு எங்ஙனம் காக்கப்படுமவர்களான
எங்களை நோக்கப் பார்க்கிறது?’ என்பர்கள் ; அதனைக் கேளா ‘நாம் உண்டிலேமோ!’ என்று இவன்
தானும் மயங்கும். 1முன்பு இவர்கள் விரும்பிக் கூறினால் மறுக்குமே? ஒரு திரளையைத்
திரட்டி ‘இது என் பிடி’ என்பர்கள்; பின்பு உண்ணாது ஒழியமாட்டானே? அப்பேச்சின் இனிமையிலே
துவக்குண்டு பின்னரும் உண்ணாநிற்கும். எமக்கு ஒரு துற்று ஈமின் என்று - இவர்களை இக்கட்டளையிலே
வேறே ஒருவன் கைக்கொள்ளுமே ; அவனையும் முன்புத்தையவனைப் போலே இரந்து உண்பிப்பார்களே இவர்கள்;
அங்கே, தன் வயிறு வாழாமல் சென்று, 2‘நீங்கள் எல்லாருமாக எனக்கு ஒரு பிடி தரவேண்டும்,’
என்னும். பண்டு நல்லது கண்டால் தன் வாயில் இடாதே இவர்களுக்குக் கொடுத்துப் போந்தவன், தன்
செல்லாமையாலே இப்பொழுது
‘எனக்கு’
என்கிறான் அன்றோ? இடறுவர் - அப்போதையவனுக்குப் பிரியமாக அவர்கள் இவன் முகம்
பாரார்களே? பின்னையும் தட்டித் திரிவர்கள்.
_____________________________________________________
1. ‘மடவார் இரக்க’
என்னாது, ‘தூ மென்மொழி மடவார் இரக்க’ என்றதற்கு
விசேடம் அருளிச்செய்கிறார், ‘முன்பு இவர்கள்’
என்று தொடங்கி.
2. ‘ஈமின்’ என்ற
பன்மைக்கும், ‘ஒரு துற்று’ என்றதற்கும் சேர, ‘நீங்கள்
எல்லாருமாக எனக்கு ஒரு பிடி தரவேண்டும்,’
என்று பொருள்
அருளிச்செய்கிறார். துற்று - கவளம்.
|