411
411
மணிமாமை குறையில்லா
மலர்மாதர் உறைமார்பன்
அணிமானத் தடைவரைத்தோள்
அடல்ஆழித் தடக்கையன்
பணிமானம் பிழையாமே
அடியேனைப் பணிகொண்ட
மணிமாயன் கவராத
மடநெஞ்சால் குறைஇலமே.
பொ-ரை :
‘மணி போன்ற ஒளியையுடைய அழகிலே யாதொரு குறைவும் இல்லாத பெரிய பிராட்டியார் நித்தியவாசம்
செய்கின்ற மார்பையுடையவனும், அழகிய பெருமை பொருந்திய விசாலமான மலை போன்ற தோள்களையும்
பகைவர்களைக் கொல்லுகின்ற சக்கரத்தைத் தரித்த திருக்கரத்தையும் உடையவனும், கைங்கரியத்தின்
அளவிலே தவறாமல் அடியேனை அடிமை கொண்ட நீலமணி போன்ற நிறத்தையுடைய மாயவனுமான சர்வேசுவரனால்
விரும்பப்படாத மடநெஞ்சால் ஒரு காரியத்தையுடையோம் அல்லோம்,’ என்கிறாள்.
வி-கு :
‘குறை இல்லாத மாதர்’ என்க. அடல் - கொல்லுதல். பணி -தொண்டு. மானம் - அளவு.
ஈடு :
இரண்டாம் பாட்டு. 1‘மேற்பாசுரத்திற்கூறிய சீலத்துக்கும் அடியான பிராட்டியோடே
கூட வடிவழகைக் காட்டி அடிமை கொண்டவன் விரும்பாத உரிமைப்பட்ட நெஞ்சால் என்ன காரியம் உண்டு?’
என்கிறாள்.
மணி மாமை குறை இல்லா
மலர் மாதர் உறை மார்பன் - ‘மணி மாமை குறை இல்லா மாதர்’ என்கையாலே, தன்னைப்போன்று
‘மணிமாமை குறை இலமே’ என்ன வேண்டாதவள் என்பதனைத் தெரிவிக்கிறாள். 2அவள் எப்பொழுதும்
அண்மையில் இருப்பதாலே என்னை அடிமை கொண்டவன். ‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்கிறவளும்
கூட இருக்கச்செய்தே என்னை விரும்பாதிருக்குமாகில், என் உடைமையால் 3எனக்குதான்
பிரயோஜனம் என்? மலரில் மணத்தையே
_____________________________________________________
1. பாசுர முழுதினையும் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘மலர்மாதர் உறைமார்பன்,
அடியேனைப் பணிகொண்ட’ என்று கூட்டி,
பாவம் அருளிச்செய்கிறார், ‘அவள் எப்பொழுதும்’ என்று தொடங்கி.
3.
ஆக, பிராட்டி சம்பந்தத்தைச்
சொன்னதற்கு, ‘எனக்குதான்
பிரயோஜனம் என்?’ என்றது,
முடிய மூன்று வகையில் பாவம்
அருளிச்செய்தவாறு. ‘குற்றம் செய்யாதவர்’ என்று தொடங்கும்
பொருளையுடைய சுலோகம். ஸ்ரீராமா. யுத். 116 : 45. இது, திருவடியைப்
பார்த்துப் பிராட்டி
கூறியது.
|