முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
297

வடிவாக வகுத்தாற்போலே இருக்கையாலே ‘மலர் மாதர்’ என்கிறாள். ‘நிறமே அன்றிக்கே, பிரியத் தகாத மென்மைத்தன்மையும் உடையவள்,’ என்பாள், ‘மாதர்’ என்கிறாள். மாது - மிருதுத்தன்மை. உறை மார்பன் - அவள் நித்திய வாசம் செய்கிற திருமார்வையுடையவன். மலரில் பிறப்பு மாத்திரமேயாய், நித்தியவாசம் செய்வது மார்பிலேயாதலின், ‘உறை மார்பன்’ என நிகழ்காலத்தாற் கூறுகிறாள். 1தான் பிறந்த மலர் நெருஞ்சிக்காடு ஆம்படியான மார்வு படைத்தவன் என்பதாம்; 2அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர், அடிக்கு நெருஞ்சிப் பழம்,’ என்றானேயன்றோ? 3முத்தன் இவ்வுலகவாழ்க்கையை நினையாதாப்போலே பூவை நினையாமலே வசிக்கும் மார்வு படைத்தவன். 4பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினைத்தாலாயிற்று, இவள் தான் பிறந்த மலரை நினைப்பது. 5அவள் ‘அகலகில்லேன்’ என்கிற மார்வை நான் இழப்பதே!

    அணி மானம் தடவரைத் தோள் - 6‘எல்லா ஆபரணங்களையும் அலங்கரிக்கத் தக்க திருத்தோள்கள்’ என்கிறபடியே, ‘ஆபரணத்துக்கு ஆபரணமான தோள்’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். 7‘நீண்டும் அழகாய்த் திரண்டும் உலக்கையை ஒத்தும்’ என்கிறபடியே, ‘நீட்சியையுடைத்தாய்ச் சுற்றுடைத்தாய் ஒருவரால் சலிப்பிக்க

_____________________________________________________

1. ‘மலரை நீக்கித் திருமார்விலே இருக்கைக்குக் காரணம் யாது?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘தான் பிறந்த’ என்று தொடங்கி.

2. ‘மலர் நெருஞ்சிக்காடாக இருக்குமோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘அனிச்சமும்’ என்று தொடங்கி. இம்மேற்கோள்,
  திருக்குறள்.

3. ‘தான் பிறந்த மலர் நெருஞ்சிக் காடு’ என்றதனால் போந்த பொருளை ஓர்
  எடுத்துக்காட்டு மூலம் அருளிச்செய்கிறார், ‘முத்தன்’ என்று தொடங்கி. இது,
  சாந்தோக். 8. 12 : 3.

4. நினையாமைக்கு வேறும் ஒரு திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘பிராட்டி’ என்று
  தொடங்கி.

5. ‘உறைமார்பன்’ என்று நிகழ்காலத்தாற் கூறுகின்றவளுடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார், ‘அவள்’ என்று தொடங்கி. ‘அகலகில்லேன்’ என்பது
  திருவாய்மொழி.

6. ஸ்ரீராமா. கிஷ். 3 : 14.

7. ‘நீண்டும்’ என்று தொடங்கும் பொருளையுடைய சுலோகப் பகுதியும்
 
மேற்கூறிய சுலோகத்தைச் சார்ந்ததேயாம்.