அ
அடிமை கொண்டது. 1‘குமரிருந்து
போகாமே’ என்பார், ‘அடியேனைப் பணிகொண்ட’ என்கிறார். என்றது, ‘இச் சரீரம்
இறைவனுக்கு உரிமைப்பட்டதாக இருக்க, அவனுக்கு உறுப்பு அன்றிக்கே போகாமல்’ என்றபடி. இங்கே
அருளிச்செய்யும் வார்த்தை: 2உடையவர் எழுந்தருளியிருக்கிற மடத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள்
அமுது செய்யா நிற்க, ஆச்சான் தண்ணீரமுது பரிமாறுகிறவர், ஓர் அருகே சாய நின்று பரிமாறினார்;
அத்தை உடையவர் கண்டு, ஓர் அடி வந்து முதுகிலே மோதி, ‘நேரே நின்றன்றோவுடோ பரிமாறுவது?’ என்றார்;
என்ன, ‘பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட’ என்று பணித்தார் ஆச்சான்.
பணி கொண்ட மணி மாயன் - நீல இரத்தினம் போன்ற கறுத்த
நிறத்தையுடையவன்; என்றது, ‘தஹ பச - சுடு அடு’ என்று அன்று அடிமை கொண்டது; 3‘பிடாத்தை
விழி விட்டு வடிவைக் காட்டி அடிமை கொண்டான்’ என்றபடி. கவராத மடநெஞ்சால் குறை இலமே -
வடிவில் சுவட்டை அறிவித்து என்னை அனுபவிப்பியானாகில், பணிவையுடைய நெஞ்சால் என்ன காரியம்
உண்டு? 4நஞ்சீயர் இவ்விடத்திலே அருளிச்செய்வது ஒரு வார்த்தை உண்டு;
‘பூசுஞ்சாந்து என் நெஞ்சமே’ என்கிறபடியே, அன்று அப்படியே இத்தை விரும்பினவன் இன்று இப்படியே
உபேக்ஷிக்கையாலே, ‘நாயகன் வரவு தாழ்த்தான்’ என்று
_____________________________________________________
1. ‘குமர் இருந்து
போகாமே’ என்றது, ‘அடியேன் என்ற சேஷத்வம் பயன்
அற்றுப் போகாமல்’ என்றபடி. அதனை விவரிக்கிறார்,
‘என்றது’ என்று
தொடங்கி.
2. ‘பணிமானம் பிழையாமே
- அடியேனைப் பணிகொண்ட’ என்றதன்
பொருளை, ஆப்தர்களுடைய சரிதையைக் காட்டி உறுதிப்படுத்துகிறார்,
‘உடையவர்’ என்று தொடங்கி. ஆச்சான் - கிடாம்பியாச்சான்.
3. பிடாத்தை - பச்சை
வடத்தை.
4.
‘மடநெஞ்சால் குறையிலம்’ என்கிறவளுடைய மனோபாவத்தை
ஆப்தசம்வாதத்தாலே விளக்குகிறார்,
‘நஞ்சீயர்’ என்று தொடங்கி. ‘பூசும்
சாந்து என் நெஞ்சமே’ என்றவிடத்தில், நெஞ்சின் காரியமான
நினைவினைச்
சாந்தாகச் சொன்னதை நோக்கி, நெஞ்சைச் சாந்துப்பரணியாகக் கொண்டு,
‘சாந்தைப்
பரணியோடே உடைப்பாரைப் போலே’ என்று திருஷ்டாந்தம்
அருளிச்செய்கிறார். நெஞ்சு பரணியாகவும்
அதிலுண்டான நினைவு
சாந்தாகவும் கொள்க. பரணி - சிமிழ். இவ்வாக்கியம், ரசோக்தி.
|