அவன
அவன் முன்னே சாந்தைப்
பரணியோடே உடைப்பாரைப் போலே, ‘என் நெஞ்சு எனக்கு வேண்டா என்கிறாள்’ என்பது. 1‘பிராட்டி
அவனோடே சேர இருந்திலளாகில் நான் ஆறி இரேனோ? தோள் அழகை எனக்குக் காட்டிற்றிலனாகில்,
நான் ஆறி இரேனோ? கையும் திருவாழியுமான அழகைக் காட்டிற்றிலனாகில், ‘சம்பந்தம் இல்லாத விஷயம்’
என்று ஆறி இரேனோ? வடிவழகால் அன்றிக் குணத்தாலே என்னை அங்கீகரித்தானாகில் நான் ஆறி
இரேனோ?’ என்கிறாள்.
(2)
412
மடநெஞ்சால் குறையில்லா
மகள் தாய்செய்து ஒருபேய்ச்சி
விடநஞ்ச
முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி
படநாகத்து அணைக்கிடந்த பருவரைத்தோட் பரம்புருடன்
நெடுமாயன் கவராத
நிறையினால் குறையிலமே.
பொ-ரை :
‘மடப்பம் பொருந்திய நெஞ்சத்தால் குறைவில்லாத தாய்மகளாகத் தன்னைச் செய்துகொண்டு வந்த
ஒரு பேயாகிய பூதனையினது மிக்க விஷத்தையுடைய முலையைச் சுவைத்துப் பால் குடித்த மிகுந்த ஞானத்தையுடைய
சிறிய குழவியும், படத்தையுடைய பாம்பின் படுக்கையிலே சயனித்திருக்கின்ற பெருத்த மலை போன்ற
தோள்களையுடைய பரம்புருடனும், நெடுமாயனுமான சர்வேசுவரன் விரும்பாத நிறை என்னும் குணத்தால் யாதொரு
பயனுமுடையோம் அல்லோம்,’ என்றவாறு.
வி-கு :
மனித வடிவிலே தாய் உருவத்தோடு வந்தவளாதலின், ‘மகள் தாய்’ என்கிறாள். மகள் என்பது, மக்கள்
என்ற சொல்லின் சிதைவு. ‘விடம் நஞ்சம்’ என்பன, ஒரு பொருட்சொற்கள். ‘மிகு ஞானம்’ என்றது,
ஈண்டுச் சுவை உணர்வையுணர்த்திற்று. குழவி - குழந்தை. பரம்புருடன் - புருடோத்தமன்.
ஈடு :
மூன்றாம் பாட்டு. 2‘பகைவர்களை அழிக்கும் ஆற்றலையுடையனாய், வேறுபட்ட மிக்க சிறப்பினையுடையனாய்,
_____________________________________________________
1. ‘மலர்மாதர் உறைமார்பன்’
என்றதனை நோக்கிப் ‘பிராட்டி’ என்று
தொடங்கியும், ‘அணி மானத் தடவரைத்தோள்’ என்றதனைக்
கடாக்ஷித்துத்
‘தோள் அழகை’ என்று தொடங்கியும், ‘அடலாழித்தடக்கையன்’ என்றதனைத்
திருவுள்ளம்
பற்றிக் ‘கையும் திருவாழியும்’ என்று தொடங்கியும், ‘மணிமாயன்’
என்றதனைப் பற்றி,
‘வடிவழகால்’ என்று தொடங்கியும் அருளிச்செய்கிறார்.
2.
‘பேய்ச்சி விடம் நஞ்சம் முலை சுவைத்த, பரம்புருடன் நெடுமாயன்’
என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘வேறுபட்ட மிக்க
சிறப்பினையுடையனாய்’ என்றது, ‘பரம்புருடன்’ என்றதனைத்
திருவுள்ளம்
பற்றி. ‘நெடுமாயன்’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘மிக்க
காதலையுடையனானவன்’ என்கிறாள்.
|