முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
303

New Page 1

துக்கக்குரல் கேட்டால்  போகத்திலே நெஞ்சு பொருந்தாதே அன்றோ? சர்வேசுவரன் திருமேனியிலே சாய்கையால் உண்டான சந்தோஷத்தாலே விரிந்த படங்களையுடையவனாதலின், ‘படநாகம்’ என்கிறது. 1அசுரர்களுடைய கூட்டம் கிட்டினால் ‘வாய்ந்த மதுகைடபரும் வயிறு உருகி மாண்டார்’ என்று முடியுமாறு போலே ஆயிற்று, அன்புள்ளவர்கள் கூட்டம் கிட்டினால் வாழும்படி.

    பரு வரைத் தோள் - 2திருவனந்தாழ்வானுடைய சம்பந்தத்தால், ஒரே தன்மையதான விக்கிரஹத்துக்குப் பிறக்கும் வேறுபாட்டைச் சொல்லுகிறது. 3‘கர்மங்காரணமாக வருகின்ற வேறுபாடுகள் இல்லை’ என்ற இத்தனை போக்கி, அடியார்களுடைய சேர்க்கையில் வேறுபாடு இல்லை எனில், அவ்வஸ்துவை அணைய ஆசைப்பட வேண்டாவே? பரம்புருடன் - தகட்டில் அழுத்தின மாணிக்கம் நிறம் பெறுமாறு போன்று, திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்த பின்பாயிற்று ‘அறப்பெரியன்’ என்று தோன்றிற்று. நெடு மாயன் - 4என் மடியில் சுவடு அறிந்த பின்பு படுக்கையில் பொருந்தி அறியாதவன். கவராத நிறையினால் குறை இலமே - அப்படி ஆதரித்தவன் இப்படி உபேக்ஷித்த பின்னர், எனக்கு என்னுடைய பெண்மையால்

_____________________________________________________

1. ‘சர்வேசுவரனைக் கிட்டினாற்கெல்லாம் சந்தோஷம் வரக்கூடுமோ?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அசுரர்களுடைய கூட்டம், என்று
  தொடங்கி. ‘வாய்ந்த’ என்ற பகுதியையுடைய பாசுரம், மூன்றாந்திருவந். 66.

2. ‘படநாகத்தணைக்கிடந்த’ என்றதன் பின், ‘பருவரைத்தோள்’ என்றதற்கு
  பாவம் அருளிச்செய்கிறார், ‘திருவனந்தாழ்வானுடைய’ என்று தொடங்கி.

3. ‘ஆனால், ‘அவிகாராய’ என்றதற்குக் கருத்து என்?’ என்னில், அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘கர்மங்காரணமாக’ என்று தொடங்கி.

4. ‘நெடுமாயன்’ என்பதற்கு மிக்க வியாமோகத்தையுடையவன் என்று பொருள்
  கூறத் திருவுள்ளம் பற்றி, ‘மிக்க வியாமோகத்தை உடையனாகையாவது யாது?’
  என்ன, ‘என் மடியில்’ என்று தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
  மடி - வயிறு. சுவடு - இனிமை. ‘என் மடியில் சுவடு’ என்ற இவ்விடத்தில்,
  ‘கண்ணன் என் ஒக்கலையானே’ என்னும் மறைமொழி அநுசந்திக்கத்தகும்.
  திருவாய். 1. 9 : 4