என
என்ன காரியம் உண்டு?
1‘நிறை அடக்கம்’ என்றது, ‘தன்னகவாயில் ஓடுகிறது பிறர்க்குத் தெரியாதபடி
இருக்கும் பெண் தன்மை.’
(3)
413
நிறையினால் குறையில்லா
நெடும்பணைத்தோள்
மடப்பின்னை
பொறையினால் முலைஅணைவான்,
பொருவிடைஏழ்
அடர்த்துஉகந்த
கறையினார் துவர்உடுக்கைக்
கடையாவின்
கழிகோல்கைச்
சறையினார் கவராத
தளிர்நிறத்தால் குறையிலமே.
பொ-ரை :
‘நிறை என்னும் குணத்தாலே குறைவற்றிருக்கின்ற, நீண்ட மூங்கில் போன்ற தோள்களையுடைய மடப்பம்
பொருந்திய நப்பின்னைப்பிராட்டியின் தனங்களைச் சேரும்பொருட்டுப் பொறையினாலே, போர் செய்கின்ற
இடபங்கள் ஏழனையும் கொன்று மகிழ்ந்த, கறை தோய்ந்த துவர் ஊட்டின உடுக்கையினையும், கடையாவினையும்
கழிகோலினையுமுடைய கையினையுடைய சறையினார் விரும்பாத தளிர் போன்ற நிறத்தால் யாதொரு
பயனையும் உடையோமல்லோம்,’ என்கிறார்.
வி-கு :
‘குறை இல்லாப் பின்னை’ என்க. ‘பின்னையினது முலை அணைவான் பொருவிடை ஏழனைப் பொறையினால்
அடர்த்து உகந்த சறையினார்,’ என்க. ‘துவர் உடுக்கைச் சறையினார்’ என்றும், ‘கடையாவினையும்
கழிகோலினையுமுடைய கையையுடைய சறையினார்’ என்றும் ‘தனித்தனியே கூட்டுக. ‘கறையினார் துவர்
உடுக்கைக் கடையாவின் கழிகோற்கைச் சறையினார்’ என்றதன் பொருளை வியாக்கியானத்திற் காணலாகும்.
ஈடு :
நான்காம் பாட்டு. 2‘தன்னைப் பேணாமல், பெண் பிறந்தாரைப் பேணும் கிருஷ்ணன்
விரும்பாத நிறம் எனக்கு வேண்டா,’ என்கிறாள்.
_____________________________________________________
1. நிறை - ‘காப்பன காத்துக்
கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம்’ என்பர்
களவியலுரைகாரர். ‘நிறைஎனப் படுவது மறைபிறர்
அறியாமை’ என்பது,
கலித்தொகை, 133.
2.
‘பின்னை முலையணைவான் பொருவிடை ஏழ் அடர்த்து உகந்த சறையினார்
கவராத தளிர் நிறத்தால்
குறை இலம்,’ என்பதனைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|