க
கறையினார் துவர் உடுக்கை
- கறை மிக்குத் 1துவர் ஊட்டின சிவந்த தோலாயிற்று உடுக்கை. காட்டில் பழங்களைப்
பறித்து இடுகையாலே கறை மிக்கு இருக்கும்; அதனால், கறைமிக்க துவர் ஆயிற்று உடுக்கை;’ அதனை நோக்கிக்
‘கறையினார் துவர்’ என்கிறது. ‘உடுக்கை’ என்றது, ஆயர்கள் காட்டிற்குப்
போகும் போது முள் கிழியாமைக்கு உடுக்கும் உடைத்தோலைச் சொல்லுகிறது. 2இதனால்,
‘அரையில் பீதகவண்ண ஆடை வேண்டாள் ஆயிற்று இவள்; பசுக்களைக் காப்பாற்றின வடிவோடே அணையக்
கணிசிக்கிறாள்,’ என்றபடி. கடையாவின்கை - உரிய காலங்களிலே கறப்பதற்குக் கையிலே கடையவும்
கொண்டாயிற்றுத் திரிவது; கடையா - மூங்கிற்குழாய். கழிகோல்கை -மூங்கிற்குழாயையும்
வீசுகோலையும் கையிலேயுடையவர். கழிகோல் - வீசுகோல். அன்றிக்கே, 3
‘கொடுவைப் பசுக்களை நியமித்துக் கறக்கைக்கு வீசுகோலைக் கையிலே கொண்டு திரியுமவர்’ என்னலுமாம்.
அன்றிக்கே, ‘கழிகோல்’ என்பதற்கு, ‘முன்னணைக்கன்று பசுக்களோடே போனால் முலையுண்ணாமைக்குக்
கொறுக்கோல் என்பது ஒன்றனை அதன் முகத்திலே கட்டிவிடுவார்கள்; அதனைச் சொல்லுதல்’ என்னுதல்.
4சந்யாசிகள் தந்தாமுக்கு என்ன ஓர் இருப்பிடம் இல்லாமையாலே மாத்திரை தொடக்கமானவற்றைக்
கையிலே கூடக் கொண்டு திரிவார்கள் ஆயிற்று; அவர்கள் போன்று பசுக்களுக்குப் புல்லும் நீரும் உள்ளவிடத்திலே
தங்குவார்களித்தனையன்றோ இவர்களும்?
_____________________________________________________
1. துவர் - சாயம்.
2. ‘திருப்பீதாம்பரத்தைச்
சொல்லாமல், தோலைச் சொல்லுவான் என்?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இதனால்’
என்று தொடங்கி.
‘பெண்ணின் வருத்த மறியாத
பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டுஎன்னை
வாட்டந் தணிய வீசிரே.’
என்பது நாய்ச்சியார் திரு.
13 : 1.
கணிசிக்கிறாள் -
விரும்புகிறாள்.
3. கொடுவைப் பசு - துஷ்டப்
பசு; கறப்பதற்கு இடம் கொடாமல் உதைக்கின்ற
பசு.
4.
‘பசுக்களோடே கூடத் திரிவான் என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘சந்யாசிகள்’
என்று தொடங்கி. மாத்திரை -
பிக்ஷாபாத்திரம், உறி முதலானவை.
|