இன
இன்பத்துக்காகத் துதிக்கிறாள்காணும்.
1அங்கும் ‘சதாபஸ்யந்தி - எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருப்பதேயன்றோ?
‘நன்று; வழியில்
கண்ணெச்சில் வாராமல் மங்களாசாசனம் செய்கிற இடத்தில், திருவபிஷேகத்திற்கு அங்கமானவற்றை
ஆசைப்படுவான் என்?’ எனின், மேல் வரும் பலத்தை விரும்பவே, நடுவில் உள்ளது தன்னடையே வருமே
அன்றோ என்னுமதனைப் பற்றச் சொல்லுகிறாள். என்றது, ‘வழிப்போக்கில் கண்ணெச்சில் வாராதொழிய
வேண்டும்’ என்றேயன்றோ மங்களாசாசனம் பண்ணுகிறது? மேல் வரும் பலத்தை விரும்பவே, அது தன்னடையே
வருமே அன்றோ?’ என்றபடி. 2சாவித்திரி தன் கணவனைக் காட்டி, ‘இவனுக்கு நான் பல
பிள்ளைகளைப் பெறவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டாளே அன்றோ?
(4)
414
தளிர்நிறத்தால் குறையில்லாத்
தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள் காரணமாக்
கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல்
கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான் கவராத
அறிவினால் குறையிலமே.
_______________________________________________
1. ‘காட்சிக்காகவோ பகவானை
வணங்குவது?’ என்ன, ‘அங்கும் என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
2.
‘இடையில் வரும் பலத்தின்பொருட்டு மேல் வரும் பலத்தைப் பிரார்த்தித்த
பேர் உளரோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘சாவித்திரி’ என்று
தொடங்கி. அதாவது, சாவித்திரி என்பாள்
ஒரு பெண் பிள்ளையைத்
தாய்தந்தையர்கள் ஒருவனுக்குக் கொடுக்க என்று முயற்சி செய்த அளவில்,
நாரதர்
வந்து, ‘அவனுக்கு ஆயுள் குறைவு’ என்று சொல்ல, அவர்களும்
அதனைக் கேட்டு இறாய்க்க, அந்தச்
சாவித்திரியானவள், ‘எனக்கு
அவனேயாகவேணும்; அவனுக்கு என்னைக் கொடுங்கோள்; அவன் ஆயுளுக்கு
நான்
கடவேன்,’ என்ன, அதனைக் கேட்டு அவர்களும் அவனுக்கு நீர்
வார்த்துக் கொடுக்க, நாள்கள் சில
சென்றவாறே, இவனைக் கொண்டுபோக யம
தூதர்கள் வந்து கொண்டு போகிற அளவிலே, அவளும் கூடப்
போய், யமன்
ஓலக்கத்திலே செல்ல, யமனும் தூதர்களைப் பார்த்து, ‘இவளை ஏன்
கூட்டிக்கொண்டு
வந்தீர்கோள்?’ என்று வெறுத்து, அந்தச் சாவித்திரியைப்
பார்த்து, ‘உனக்கு என்ன வேண்டும்?’
என்ன, ‘கணவன் வேண்டும்’ என்ன,
‘அவனை ஒழியக்கேள்’ என்ன, ‘ஆகில் அவனுக்குப் பல பிள்ளைகளை
நான்
பெறுதல் வேண்டும்’ என்ன, அவனும் அப்படியே அவள் விருப்பத்தை
முடித்தான் என்பதனைத் தெரிவித்தபடி.
|