முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
312

வற

வற்றாலும் நிறைவுற்றிருந்த நகரத்தை எரித்துச் சாம்பல் ஆக்கின. என்றது, ‘பையல் குடியிருப்பை அழித்து 1மூலையடியே வழி நடத்தின’ என்றபடி.

    களி மலர்த்துழாய் அலங்கல் கமழ் முடியன் - தேனையுடைத்தான மலரோடு கூடின திருத்துழாய் மாலை கமழா நின்றுள்ள திருமுடியையுடையவனை. 2அவன் தான் மக்கட் பிறவியை மேற்கொண்டு அவதரித்தால், பிரகிருதி சம்பந்தம் இல்லாத பொருள்களும் அதற்குத் தகுதியான வடிவைக் கொண்டு வந்து தோன்றுவன இத்தனையேயன்றோ? ஆகையாலே, அவன் கலம்பகன் கொண்டு வளையம் வைத்தாலும் இவர்கள் எடுத்துச் சொல்லுவது திருத்துழாயை இட்டேயாம். 3தனக்கேயுரிய சிறப்புப் பொருள்களைக் கொண்டே அன்றோ கவி பாடுவது? பாண்டியர்கள் மற்றையார் கருமுகை மாலையைக் கொண்டு வளையம் வைத்தாலும், அவர்களுக்கே உரியதான வேம்பு முதலானவற்றையிட்டேயன்றோ கவி பாடுவது? கடல் ஞாலத்து அளி மிக்கான் - சமுசாரத்தில் தண்ணளி மிக்கவன் ஆயிற்று. மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து, ‘இதைப் போக்கவேண்டும்’ என்று திருவுள்ளம் 4இங்கே வேரூன்றினபடி. என்றது, பிராட்டியைப் பிரிப்பது, இளையபெருமாளை அகற்றுவதாய், பின்னர், ‘அவதாரத்துக்குக் காலமாயிற்று’ என்று தேவ காரியத்திலே ஒருப்படுவித்துக் கிளப்ப வேண்டும்படியன்றோ இங்கே

_____________________________________________________

1. ‘மூலையடியே வழி நடத்தின’ என்றது, நகரம் பாழானால் தடையில்லாமல்
  மூலைக்கு மூலை நடக்கலாம்படி செய்கையைக் குறித்தபடி.

2. ‘சக்கரவர்த்தி திருமகனுக்குத் திருத்துழாய் மாலையுண்டோ?’ என்ன,
  ‘அவன்தான்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
  கலம்பகன் - பல மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை.

3. அதற்கே வேறும் ஒரு காரணத்தை அருளிச்செய்கிறார், ‘தனக்கேயுரிய’
  என்று தொடங்கி. மற்றையார் - சேர சோழர்கள். ‘முதலானவற்றை’ என்றது,
  ஆத்தி மாலையையும், பனம்பூ மாலையையும்.

4. ‘இங்கே வேர் ஊன்றினபடி’ என்றது, கிருபையின் மிகுதியினாலே
  இவ்வுலகத்தில் திருவுள்ளம் ஊற்றிருந்தபடியைத் தெரிவித்தபடி.
  அந்தஊற்றத்தை அருளிச்செய்கிறார், ‘பிராட்டியைப் பிரிப்பது’ என்று
  தொடங்கி. என்றது, ‘தேவர்கள் இவர் அங்கே எழுந்தருளுவதற்காகப்
  பிராட்டியைப் பிரிப்பது முதலான காரியங்களைச் செய்தார்கள்,’ என்றபடி.