New Page 1
வேரூன்றினபடி?’ என்றவாறு.
கவராத அறிவினால் குறை இலம் -அப்படிப்பட்டவன் விரும்பாத அறிவினால் காரியம் உடையோம் அல்லோம்.
1பிராட்டியுடைய இரண்டாம் பிரிவிற்கு அடியான வனவாச ஞானம் போலே இருக்கிற இந்த
அறிவால் என்ன பிரயோஜனம் உண்டு? 2பிரிவோடே சேரும்படியாய் அன்றோ அது
இருப்பது?
(5)
415
அறிவினால் குறையில்லா
அகல்ஞாலத் தவர்அறிய,
நெறிஎல்லாம் எடுத்துஉரைத்த
நிறைஞானத்து ஒருமூர்த்தி,
குறியமாண் உருவாகி,
கொடுங்கோளால் நிலங்கொண்ட
கிறிஅம்மான் கவராத
கிளர்ஒளியால் குறையிலமே.
பொ-ரை :
‘அறிவு ஒன்றில் மாத்திரம் குறைபாடு இருப்பதை அறியாத அகன்ற உலகிலேயுள்ள மக்கள் அறியும்படியாக
உபாயங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கூறிய நிறை ஞானத்து ஒரு மூர்த்தியும், சிறிய பிரமசரிய
வடிவங்கொண்டு கொடிய செயலாலே உலகத்தை அளந்துகொண்ட விரகையுடைய தலைவனுமான சர்வேசுவரன்
விரும்பாத மிக்க ஒளியால் யாதொரு பயனையும் உடையேம் அல்லோம்,’ என்கிறாள்.
வி-கு :
‘மூர்த்தியாகிய அம்மான், ஆகிக் கொண்ட அம்மான்’ என்க. கிறி - விரகு; உபாயம்.
ஈடு : ஆறாம்
பாட்டு. 3‘அறிவில்லாதார்க்குத் தன்னை அடைவதற்குரிய உபாயங்களை உபதேசித்து, அறிவு
பிறத்தற்குத் தகுதியில்லாதாரை வடிவழகாலே தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன் விரும்பாத மிக்க ஒளியால்
என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.
அறிவினால் குறை
இல்லா - அறிவினால் குறைவுபட அறியாத. அறிவு ஒன்றிலும் ஆயிற்றுக் குறைவுபட
_____________________________________________________
1. ‘ஞானம் உத்தேஸ்யம்
அன்றோ?’ என்ன, ‘பிராட்டியுடைய’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
2. ‘பிரயோஜனம் இல்லையோ?’
என்ன, ‘பிரிவோடே’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
3. பாசுரம்
முழுதினையும் கடாக்ஷித்து, கீதோபநிடத ஆசாரியனையும்
வாமனனையும் சொல்லுகிறதற்குப் பிரயோஜனம்
சொல்லுகிற வழியாலே
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|