த
தானே அறிவித்து, பிரபத்தி
மார்க்கம் முடிவாக உபதேசித்தபடியைச் சொல்லுகிறது.
‘ஒருவன்
சொன்னான்’ என்ற அளவில் அது பிரமாணமாமோ? நம்பத் தக்கதாக வேண்டாவோ?’ என்னில், அதற்கு
விடை அருளிச்செய்கிறார் மேல் : நிறை ஞானத்து ஒருமூர்த்தி - நிறைந்த ஞானத்தை உடைத்தான ஒப்பற்றதான
சொரூபத்தையுடையவன். என்றது, ‘இத்தலையில் அறிவு இன்மையால் இவனுக்கு அழிவு வாராதபடியான ஞானபூர்த்தியையுடையவன்’
என்பதனைத் தெரிவித்தபடி. 1பிரமாணமாய் எல்லார்க்கும் ஞானத்தைப் பண்ணிக்
கொடுப்பதான வேதத்தினுடைய என்றும் உளதாம் தன்மையும், புருஷனால் செய்யப்படாத தன்மையும் தன்
அதீனமாம்படி அவற்றை நினைத்துச் சொல்லுமவனாய் உள்ளவன். 2வேதார்த்தத்தை விரித்து
அருளிச்செய்தவன். குறிய - கோடியைக் காணியாக்கிக்கொண்டாற்போலே, வளர்ந்த போதையிற்காட்டிலும்
கவர்ச்சிகரமாய் இருக்கிறபடி. மாண் உருவாகி - 3பிறந்த போதே இரப்பினை மேற்கொண்டு,
அதுவே பயிற்சியாய் இருந்தபடியாலே, ‘பிறப்பதற்கு முன்பெல்லாம் இதுவேயோ செயல்?’ என்னும்படிக்குத்
தகுதியாக ஆயிற்று, 4‘உண்டு’ என்று இட்ட போதோடு ‘இல்லை’ என்று சொல்லிக் கதவு
அடைத்த போதோடு வாசி அற முகமலர்ந்து போகும்படிக்குத் தகுதியாக ஆயிற்று இரப்பிலே தழும்பு ஏறினபடி.
ஆக, ‘அறிவிக்கக் கேளாதாரை 5வடுக விடுநகம் இட்டு வடிவழகாலே
_____________________________________________________
1. ‘ஞானநிறைவு மாத்திரம்
போதியதாமோ? என்றும் உள்ளதாய்ப் புருஷனால்
செய்யப்படாததாயுமுள்ள வேதம் மூலமாக வேண்டாவோ
பிரமாணம்
ஆவதற்கு?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பிரமாணமாய்’ என்று
தொடங்கி.
2. ஸ்ரீ கீதையும் வேதார்த்தம்
என்கிறார் ‘வேதார்த்தத்தை’ என்று தொடங்கி.
3. ‘ஆகி’ என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார். ‘பிறந்தபோதே’ என்று
தொடங்கி. ‘தகுதியாகவாயிற்று’ என்றதனைப் பின்னே
வருகின்ற ‘தழும்பு
ஏறினபடி’ என்றதனோடு கூட்டிப் பொருள் காண்க.
4. ‘மாண்’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘உண்டு என்று
இட்டபோதொடு’ என்று தொடங்கி.
5. வடுக
விடு நகம் - வடுகன் கட்டும் கிட்டிக்கோல்.
|