முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
317

தனக

தனக்கு ஆக்கிக்கொள்ளுமவன்’ என்பதனைத் தெரிவித்தபடி.

    கொடுங்கோளால் - 1வெட்டிய கோளாலே; என்றது, வடிவழகைக் காட்டி அவனை வாய் மாளப் பண்ணினபடியைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, ‘கொடு’ என்றதனைக் ‘கோடு’ என்றதனுடைய குறுக்கல் விகாரமாகக் கொண்டு, ‘கோடு’ என்பதற்கு விலங்குதல் என்று பொருள் கூறி, ‘விலங்குதலாவது, செவ்வைக்கேடு’ என்று கொண்டு, ‘செவ்வைக் கேடாவது, மூன்று அடி கேட்டு இரண்டு அடிகளாலே அளப்பது; சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளப்பது; ஆக, இப்படிகளாலே அவனை வஞ்சித்தபடியைச் சொல்லுகிறது என்னுதல். என்றது, தீய உபாயத்தைப் பிரயோகம் செய்தவர்களுக்கு அதற்குத் தகுதியாக உத்தரம் சொல்லுவாரைப் போலே, அவன் செவ்வைக்கேட்டிற்குத் தகுதியாகத் தானும் செவ்வைக் கேடனாய்க்கொண்டமையைத் தெரிவித்தபடி. கிறி அம்மான் - அவன் தரும் விரகு அறிந்து வாங்க வல்ல பெருவிரகனான சர்வேசுவரன். 2‘பெருங்கிறியான்’ என்னக் கடவதன்றோ? கவராத கிளர் ஒளியால் குறை இலமே - செவ்வை கெடவாகிலும் தன்னுடைமையைத் தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன், முன்னரே இசைந்து தன்னைப் பெறவேண்டும் என்றிருக்கிற எனக்கு வந்து முகங்காட்டித் தனக்கு ஆக்கிக்கொள்ளாத பின்பு எனக்கு இத்தால் காரியம் உண்டோ? கிளர்ஒளி - மிக்க ஒளி; என்றது, சமுதாய சோபை.

    (6)

416

கிளர்ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர்ஒளிய இரணியனது அகல்மார்பம் கிழித்து உகந்த,
வளர்ஒளிய கனல்ஆழி வலம்புரியன், மணிநீல
வளர்ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.

_____________________________________________________

1. ‘வெட்டிய கோளாலே’ என்றது, பலாத்காரத்தாலே கொள்ளுதலைத்
  தெரிவித்தபடி. கோள் - கொள்ளுதல்.

2. திருவிருத்தம், 91.