New Page 1
தேவர்களுடைய வரத்தை
1ஊட்டியாக இட்டுத் திருவுகிருக்கு இரை போரும்படியாக வளர்த்த மார்பாதலின்,
‘அகல் மார்பம்’ என்கிறது.
கிழித்து -
2நரசிம்ஹத்தினுடைய மொறாந்த முகத்தையும், நா மடிக்கொண்ட உதட்டையும், குத்துதற்கு முறுக்கின
கையையும், அதிர்ந்த அட்டகாசத்தையும் கண்டவாறே, பொசுக்கின பன்றி போலே உருகினான் ஆயிற்றுப்
பொன்னன். ஆகையாலே, பின்னர் வருத்தமின்றியே கிழித்துப் போகட்டான். 3நெற்றியது
கண்ணும் உச்சியது புருவமுமாய்க்கொண்டு தோற்றின போது மரத்தினைப் பற்றியுள்ள நெருப்புப்
போலே அச்சமாகிய நெருப்பு உள்ளே நின்று எரியப் புக்கவாறே பதஞ்செய்யுமே அன்றோ? உகந்த -
‘சிறுக்கனுடைய விரோதி போகப் பெற்றோமே!’ என்று உகந்தபடி. அன்றிக்கே, 4‘ஏ தேவனே!
உன்னைத் துதித்த என்னிடத்தில் என் தமப்பனாருக்கு அதனால் உண்டான பாபமானது நாசம் அடையட்டும்,’
என்கிறபடியே, இவன்தான் காற்கட்டி ஆணையிடாதே, இவன்தானே ‘கொல்ல வேண்டும்’ என்று இசையப் பெற்றோமே
அன்றோ என்று உகந்த உகப்பு என்னுதல்.
வளர் ஒளிய கனல்
ஆழி வலம்புரியான் - 5காவற்காட்டில் துஷ்ட மிருகங்களுக்கு ஊட்டி இட்டு வளர்க்குமாறு
போலே, தேவர்களுடைய வரங்களை ஊட்டியாக இட்டு வளர்த்த பையலுடைய மார்பு முழுவதும் திரு உகிருக்கு
அரை வயிறாம்படி ஆயிற்றே அன்றோ? 6ஒருவன் கை
_____________________________________________________
1. ஊட்டி - உணவு.
2. ‘பொன்னன் உரத்தைக்
கிழிக்கப்போமோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘நரசிம்ஹத்தினுடைய’ என்று தொடங்கி.
மொறாந்த -
திறந்த.
3. ‘உருக்குவதற்கு நெருப்பு
எங்கே உள்ளது?’ என்ன, ‘நெற்றியதும் கண்ணும்’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
4. ஸ்ரீ விஷ்ணு புரா.
1. 20 : 21. காற்கட்டி - தடை செய்து.
5. ‘கனல்’ என்று அடைமொழிக்குக்
கருத்து அருளிச்செய்கிறார் ‘காவற்காட்டில்’
என்று தொடங்கி.
6. ‘ஒருவன்
கைபார்த்திருப்பார்’ என்று தொடங்கிச் சிலேடையாக
அருளிச்செய்கிறார். கைபார்த்திருப்பார்
- ‘ஒருவனுக்குப்
பரதந்திரராயிருப்பார்’ என்பதும், ‘கையிலே இருப்பார்’ என்பதும் பொருள்.
கைசெய்து
- ‘துணை செய்து’ என்பதும், ‘கையிலே இருந்து’ என்பதும்
பொருள்.
|