முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
32

New Page 1

மேன்மையை நினைத்து இருப்பவர்களாயின், அவர்களைக் கிட்டுவோர் இலர் அன்றே? ஆதலின், ‘இணங்கி’ என்கிறார். என்றது, ‘எளியனாய் எல்லாரோடும் பொருந்தியிருப்பவர்களாய்’ என்றபடி. 1உலகு உடன் ஆக்கிலும் - உலகத்தைத் தங்களோடே சேர்த்துக்கொண்டார்களே ஆகிலும். என்றது, 2‘ஸ்ரீராமபிரான் இராச்சியத்தை எல்லாரையும் அநுசரித்துக்கொண்டு ஆண்டார்,’ என்கிறபடியே, சேர்த்துக்கொண்டு அரசு ஆண்டார்களேயாகிலும்’ என்றபடி. 3ஆங்கு அவனை இல்லார் - அந்த இராச்சியத்தில் அவன் திருவருள் இல்லையாகில், அந்த இராச்சிய இலக்குமிதான் கிடையாது. மணம் கொண்ட போகத்து மன்னியும் - பகவானுடைய திருவருளால் அந்த இராச்சியத்தை அடைந்தாலும். செவ்வையை உடைத்தான செல்வம் ஆதலின், ‘மணம் கொண்ட போகம்’ என்கிறார். மீள்வர்கள் - அந்த ஐஸ்வரியம் கிட்டினாலும் அதனுடைய இயற்கையாலே மீளுவர்கள்.

    மீள்வு இல்லை - 4‘பின்னர் மீண்டு வருகிறான் இல்லை’ என்கிற பேற்றைப் பெற அமையும். ‘எத்தால்?’ என்னில், பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமின் - தன்னுடைய பரிசத்தாலே விரிந்த படங்களையுடைய திருவனந்தாழ்வானை நிரூபகமாகவுடையவனுடைய திருநாமங்களிலே மூழ்குங்கோள். ‘திருநாமத்திலே மூழ்கினவர்களைத் திருவனந்தாழ்வானைப் போன்று விடான்’ என்பார். ‘அரவணையான் திருநாமம் படிமின்’ என்கிறார். அன்றிக்கே, ‘இவ்விதமாக அறிந்தவர்கள் பாதங்களால் ஏறுகிறார்கள்,’ என்கிறபடியே, துகைத்து ஏறலாம்படியான

_____________________________________________________

1. ‘உலகு உடன் ஆக்கிலும்’ என்றது, ‘உலகத்தைத் தங்களுக்கே
  உரியதாகும்படி செய்துகொண்டார்களேயாகிலும்’ என்றபடி.

2. ‘அப்படிச் செய்துகொண்ட பேர் உளரோ?’ என்னும் வினாவிற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘ஸ்ரீராமபிரான்’ என்று தொடங்கி. இது, சங்க்ஷேப
  ராமாயணம்.

3. ‘ஆங்கு அவனை இல்லார்’ என்பதற்கு, அந்தச் செல்வம் விஷயமாக,
  செல்வத்தைக் கொடுத்தவனான சர்வேசுவரனை ஆஸ்ரயித்துக்கொண்டு
  போதல் இல்லாதவர்கள் என்பது பொருள்.

4. சாந்தோக்யம், 8 - 15.