முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
321

1

1‘எப்பொழுதும் பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்,’ என்கிறபடியே, இப்படிக் கண்டு ஜீவிக்குமதேயன்றோ உள்ளது?

    ‘‘மணி நீல வளர் ஒளி’ என்பது என்? அப்போது திருமேனி வெளுத்து அன்றோ இருந்தது?’ என்னில், ‘சிறுக்கன் துன்பம் தீரப் பெற்றோமே!’ என்று திருமேனி குளிர்ந்தபடியைச் சொல்லுகிறது. கவராத வரி வளையால் குறை இலமே -  ‘அவ்வடிவையுடையவன் தானே வந்து மேல் விழுந்து விரும்பி வாங்கி இட்டுக்கொள்ளாத இவ்வளையால் எனக்கு என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.

(7)

417

வரிவளையால் குறையில்லாப் பெருமுழக்கால் அடங்காரை
எரிஅழலம் புகஊதி இருநிலம்முன் துயர்தவிர்த்த
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்துஏத்தும்
விரிபுகழான் கவராத மேகலையால் குறையிலமே.

    பொ-ரை : ‘வரிகளையுடைய பாஞ்சஜன்யம் என்னும் சங்கினது குறைபாடு இல்லாத பெரிய ஒளியால், எரிகின்ற அச்சமாகிய நெருப்பானது பகைவர்கள் மனங்களிலே புகும்படியாக ஊதிப் பெரிய நிலத்தினது துன்பத்தை நீக்கிய, அறிதற்கு அரிய சிவனும் பிரமனும் இந்திரனும் வணங்கி ஏத்துகின்ற விரிந்த கல்யாண குணங்களையுடைய சர்வேசுவரன் விரும்பாத மேகலையால் யாதொரு பயனையும் உடையோம் அல்லோம்’ என்கிறாள்.

    வி-கு : ‘வரிவளையினது குறை இல்லாத பெருமுழக்காலே அடங்கார் மனங்களிலே எரி அழலம் புக ஊதி நிலத்தினது துயரைத் தவிர்த்த விரிபுகழான்,’ என்க. அழலம் : அம் - சாரியை. அழல் - நெருப்பு. ‘வளையால், அடங்காரை’ என்பன வேற்றுமை மயக்கங்கள். ‘தெரிவரிய’ என்பது, ‘சிவன்’ முதலானோர்கட்கு அடை.

    ஈடு : எட்டாம் பாட்டு. 2‘உலகத்திற்கு உபகாரத்தைச் செய்த சர்வேசுவரன், தனக்கே உரியவளான என்னை

_____________________________________________________

1. ‘இந்தப்படியைக் காணுதல் ஜீவிப்பதற்குக் காரணமாய் இருக்குமோ?’ என்ன,
  ‘எப்போதும்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். இது,
  ஸ்வேதாஸ்வதரம்.

2. ‘இருநில முன் துயர் தவிர்த்த’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘உலகத்திற்கு’
  என்று தொடங்கி, அவதாரிகை அருளிச்செய்கிறார். மேகலை - உயர்ந்த
  உடை.