முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
323

New Page 1

யோகிகளுக்குத் தெளிவும் விருத்தியடைந்தது’; 1‘அந்தச்சங்கின் ஒலியானது திருதராஷ்டிரன் புத்திரர்களுடைய மனங்களைப் பிளந்தது,’ என்கிறபடியே, ஸ்ரீ பாஞ்சஜன்யத்தின் ஒலியாகிற இதுதான் அன்புடையவர்கள் கேட்க ஆசைப்பட்டிருப்பதுமாய், பகைவர்கள் முடிகைக்குக் காரணமுமாய் இருப்பது ஒன்றே அன்றோ?

    2பெரியாழ்வார் திருமகளார்க்கும் விசேடித்து ஜீவனமாய் இருப்பது ஒன்றே அன்றோ இது? ‘பூங்கொள் திருமுகத்து மடுத்து ஊதிய சங்கு ஒலியும், சார்ங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்றுகொலோ!’ என்பது நாய்ச்சியார் திருமொழி. 3என்றது, ‘ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கும் உருக்குமிணிப்பிராட்டிக்கும் உண்டான விடாய் தனக்கு ஒருத்திக்கும் உண்டாகையாலே, அவர்கள் இருவரும் பெற்ற பேற்றை நான் ஒருத்தியும் ஒருகாலே பெறவேண்டும்,’ என்கிறாள் என்றபடி. 4‘இது, பட்டர் அருளிச்செய்ய நான் கேட்டேன்’ என்று நம்பிள்ளை அருளிச்செய்வர். 5சிசுபாலன் சுயம்வரத்திலே வந்த போது உருக்குமிணிப்பிராட்டி, ‘இவ்வளவிலே கிருஷ்ணன் வந்து முகங்காட்டிற்றிலனாகில் நான் பிழையேன்!’ என்ன, அவள் கலங்கின சமயத்திலே புறச்சோலையிலே நின்று ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை முழக்க, அது வந்து செவிப்பட்டது; இராவணன் மாயா சிரசைக் காட்டிய போது பிராட்டி தடுமாற, அவ்வளவிலே வில்லின் நாண் ஒலி வந்து செவிப்பட்டது;

_____________________________________________________

1. ஸ்ரீ கீதை, 1 : 19.

2. ‘ஸ்ரீ பாஞ்சஜன்யத்தின் ஒலி தாரகம் என்று ஆசைப்பட்ட பேர் உளரோ?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பெரியாழ்வார்’ என்று தொடங்கி.

  ‘கோங்குல ரும்பொழில் மாலிருஞ் சோலையில் கொன்றைகள்மேல்
  தூங்குபொன் மாலைக ளோடுஉடனாய்நின்று தூங்குகின்றேன்
  பூங்கொள் திருமுகத் துமடுத் தூதிய சங்கொலியும்
  சார்ங்கவில் நாணொலி யும்தலைப் பெய்வதுஎஞ் ஞான்றுகொலோ!’

  என்பது அத்திருப்பாசுரம்.

3. ‘அவர்கள் ஒன்றை விரும்ப, ஆண்டாள் இரண்டனையும் விரும்புகிறபடி
  என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘என்றது’ என்று
  தொடங்கி.

4. இது - இந்தப் பொருள்.

5. ‘உருக்குமிணிப்பிராட்டியும், பிராட்டியும் விரும்பியது எப்போது?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘சிசுபாலன்’ என்று தொடங்கி.