முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
325

New Page 1

முடுகினால் இவன்தான் வாய்க்கரையிலே இருந்து செய்யும் ஆர்ப்பரவத்தைக் கேட்டு எதிரிகள் முழுக்காயாக அவியும்படியாக இருப்பவன். அந்தப்புரத்திலுள்ளார் ‘எங்கள் வாய்புகு சோற்றைப் பறித்து ஜீவியாநின்றான்!’ என்று முறைப்பட்டால், அவன் 1வாய்விடாச்சாதி என்னலாம்படி அன்றோ இருப்பது? ஓசையும் ஒளியும் உடையனாய் எதிரிகளை ஊதப் பறக்கும்படி செய்தே அன்றோ இருப்பது? 2அல்லாத ஆழ்வார்கள் கூரியரேயாகிலும், ‘தடியர் கழுந்தர் என்னலாய், இவனைப் போலே சுஷியுடையார் இலரே அன்றோ? 3மரங்கள்போல் வலிய நெஞ்சர் ஆகையாலே எரிஅழலம் புக ஊதிக் கொளுத்தினபடி. ‘இப்படி அடியார்களைப் பாதுகாத்தவன் விரும்பாத மேகலையால் எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறாள் என்னுதல்.

(8)

418

மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல்அல்குல
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகுஅணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.

_____________________________________________________

1. வாய் விடாச்சாதி - ‘வார்த்தை சொல்லமாட்டாதவன்’ என்பதும், ‘வாயை
  விடாதவன்’ என்பதும் பொருள். ‘வரி’ என்ற பதத்தையும், ‘பெருமுழக்கால்’
  என்றதனையும் கடாக்ஷித்து, ‘ஓசையும் ஒளியுமுடையனாய்’ என்கிறார்.
  இதனால், ‘வார்த்தை சொல்ல வல்லவன்’ என்றும், ‘ஒளியையுடையவன்;
  என்றும் தெரிவித்தபடி. என்றது, ‘உலகத்தில் வார்த்தை சொல்ல
  வல்லவனானால், ஒளி இல்லாமல் இருப்பான்; ஒளியுடையனாயிருப்பின்,
  வார்த்தை சொல்ல வல்லவனல்லனாயிருப்பான்; அப்படியன்றிக்கே,
  ஒளியையும் ஓசையையுமுடையவனாய்’ என்றபடி. ‘ஊதப் பறக்கும்’ என்றது,
  ‘ஊதினால் பறந்து போகும்படி’ என்றபடி.

2. ‘மற்றைய ஆழ்வார்களைக்காட்டிலும் ஸ்ரீ பாஞ்சஜன்யத்திற்கு உயர்வு யாது?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அல்லாத’ என்று தொடங்கி.
  மற்றைய ஆழ்வார்களாவார், சக்கரம் கதை முதலானவர்கள். கூரியர் - கூரிய
  அறிவினர்; தீக்ஷணர்கள். தடியர் - கதை, முஷ்கரர், கழுந்தர் -வில்; கழுந்து,
  சப்பரை. சுஷி - ஞானம், துவாரம்.

3. ‘ஊதிக் கொளுத்துகிற போது மரத்திலே ஆக வேண்டாவோ?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘மரங்கள்போல்’ என்று தொடங்கி. இது,
  திருமாலை, 27ஆம் பாசுரம்.