New Page 1
பொ-ரை :
‘மேகலையாலே குறைவில்லாத மெலிந்திருக்கின்ற அகன்ற அல்குலையுடைய இன்பத்திற்குத் தக்கவளான
உஷையினது புகழையுடைய தந்தையாகிய, வெற்றி பொருந்திய பாணாசுரனுடைய தோள்களைத் துணித்து, ஆதிசேஷ
சயனத்தின்மேலே தூங்குகின்றவனைப் போன்று உலகமெல்லாம் நன்மையிலே பொருந்தும்படி யோக நித்திரையைச்
செய்கின்ற சர்வேசுவரன் விரும்பாத இந்தச் சரீரத்தால் யாதொரு பயனையும் உடையோம் அல்லோம்,’
என்கிறாள்.
வி-கு :
மேகலை - ஓர் ஆபரணம்; இடையிலே அணிந்து கொள்வது; ஏழு அல்லது, எட்டுக் கோவையால் ஆயது. அன்றிப்
புடைவையுமாம். ‘குறையில்லாப் போகமகள்’ என்றும், ‘மெலிவுற்ற போகமகள்’ என்றும் தனித்தனியே
கூட்டுக. ‘தந்தையாகிய வாணன்’ என்க. புகழையும் விறலையுமுடைய வாணன். ‘துணித்து யோகணைவான்’
எனக் கூட்டுக.
ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 1‘அடியார்க்கு விரோதியான வாணனை அழியச்செய்து, எல்லாரும் உய்வு
பெறும் வழியை எண்ணுமவன் விரும்பாத உடம்புகொண்டு காரியம் என்?’ என்கிறாள்.
மேகலையால் குறை
இல்லா மகள் - 2‘உஷைக்குக் கூறை உடை அழகியதாய் இருக்கும்போலேகாண்’ என்று
அருளிச்செய்வராம் வங்கிப்புரத்து நம்பி. மெலிவுற்ற மகள் - மென்மைத்தன்மையுடையளாய்
உள்ளவள். என்றது, ‘பிரிந்து தனியிருக்கப் பொறாதவள்’ என்றபடி. அகல் அல்குல் மகள் - அகன்ற
அல்குலையுடையளாய் இருக்கை. போக மகள் - 3போகத்திற்குத் தக்கவளான பெண்பிள்ளை.
புகழ்த்தந்தை - உஷைக்குத் தந்தையான வார்த்தைப்பாட்டால் உள்ள புகழையுடையவன். அன்றிக்கே,
‘சௌரியம் வீரியம் முதலியவைகளால் உள்ள பிரசித்தியையுடையவன்’ என்னுதல். விறல் வாணன் -
மிடுக்கையுடைய வாணன். ஒரு தேவதையின் சந்நிதியிலே இருந்தால் சத்துவகுணம் தலையெடுத்து இருக்கக்
கூடியதாய் இருக்குமே
_____________________________________________________
1. ‘விறல் வாணன் புயம் துணித்து
யோகணைவான் கவராத’ என்ற பதங்களைக்
கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘மற்றையோர் உடையில்லாதவர்களோ?
இவளை ‘மேகலையால் குறையில்லா’
என்கிறது என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘உஷைக்கு’
என்று தொடங்கி.
3. ஆக,
‘மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல் அல்குல் போகமகள்’
என்ற அடைமொழிகளால், ‘ஒப்பனையழகாலும்,
ஆத்தும குணத்தாலும்,
பருவத்தாலும் குறைவற்றவள்’ என்பதனைத் தெரிவித்தபடி.
|