1அவன
1அவன்தான்
தன் உடம்பு ‘பத்தர்களுக்காகவே’ என்று இருக்குமாறு போன்று இறைவனுக்காகக் கண்ட உடம்பாயிற்று
இது.
(9)
419
உடம்பினால் குறையில்லா
உயிர்பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணிபலவா
அசுரர்குழாம் துணித்துஉகந்த
தடம்புனல சடைமுடியன்
தனிஒருகூ றமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத
உயிரினால் குறையிலமே.
பொ-ரை :
‘சரீர பலத்தில் குறைவில்லாத அசுரர் கூட்டங்கள், உயிர் நீங்கிய மலைத்துண்டுகள் கிடந்தன
போலத் துண்டங்கள் பலவாகத் துணித்து மகிழ்ந்த, மிகப் பெரிய கங்கையைத் தரித்த சடையாகிய
முடியையுடைய சிவபிரான் ஒரு பக்கத்திலே ஒப்பில்லாதபடி விரும்பி வசிக்கின்ற திருமேனியையுடைய
சர்வேசுவரன் விரும்பாத என்னுடைய இந்த உயிரால் யாதொரு பயனையும் உடையோம் அல்லோம்,’ என்கிறாள்.
வி-கு :
‘உடம்பினால் குறையில்லா அசுரர்’ என்க. ‘துணித்து உகந்த உடம்புடையான்’ எனக் கூட்டுக. புனல -
அகரம் சாரியை; ஆறாம் வேற்றுமை உருபுமாம்.
ஈடு :
பத்தாம் பாட்டு. முதற்பாசுரத்தில் சொன்ன சீலகுணத்தையும் விரோதிகளை அழித்தலையும்
சொல்லி, ‘அவன் விரும்பாத உயிரால் என்ன காரியம் உண்டு?’ என்று, முதற்பாசுரத்தில் தொடங்கியதற்குச்
சேர முடிக்கிறாள். ‘உடம்பினால் குறை இல்லா அசுரர் குழாம் உயிர் பிரிந்த மலைத்துண்டம் கிடந்தன
போல் துணி பலவாத் துணித்து’ என்றதனால், ‘நீறு ஆகும்படியாக நிருமித்துப் படைதொட்ட’ என்றதனைச்
சொல்லுகிறது. ‘தடம் புனல் சடை முடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும் உடம்பு உடையான்’ என்றதனால்,
‘கூறு ஆளும் தனி உடம்பன்’ என்றதனைச் சொல்லுகிறது.
2உடம்பினால்
குறை இல்லா அசுரர் குழாம் - உயிரைத் தேய்த்து உடம்பை வளர்த்திருந்தவர் பிறப்பு இறப்புகளிலே
எப்பொழுதும் உழன்று திரிகின்றவர்களாய்ப்
_____________________________________________________
1. இவள்தான், தன் உடம்பை ‘அவனது’ என்று இருக்கும் என்னுமதனைத்
திருஷ்டாந்தத்தாலே காட்டுகிறார், ‘அவன்தான்’ என்று தொடங்கி.
‘பத்தர்களுக்காகவே’ என்ற
பொருளையுடைய சுலோகம், ஜிதந்தா.
2.
‘உடம்பினால் குறையில்லா அசுரர்’ என்றதன் கருத்து, ‘சரீரத்தை
வளர்ப்பதில் ஒரு குறை இன்றிக்கே
இருக்கிற அசுரர்கள்’ என்றவாறாம்.
|