கூற
கூற வேண்டும்படியாயிற்று
அவர்களுடைய அகங்காரம். என்றது, ‘அகங்காரம் இல்லாதவர்கள் அணையக்கூடிய உடம்பிலே ஆயிற்று
அகங்காரம் கொண்டவர்களுக்கும் இடங்கொடுக்கிறான்’ என்றபடி.
கவராத உயிரினால்
குறை இலம் - ‘இப்படிப் பொதுவான உடம்பு படைத்தவன் ஆசைப்பட்ட எனக்கு உதவானாகில், இவ்வாத்தும
வஸ்துவைக்கொண்டு என்ன காரியம் உண்டு?’ என்கிறாள். 1இதற்கு முன்னர் எல்லாம்
சரீரத்தையும் சரீரத்தோடு சேர்ந்திருக்கின்ற பொருள்களையுமே அன்றோ ‘வேண்டா’ என்றது? அவைதாம்
அழியக்கூடியவையாய் இருக்கையாலே தாமாகவே அழியுமவற்றை ‘வேண்டா’ என்றதாய் இருக்குமே அன்றோ?
அதற்காக நித்தியமான ஆத்துமவஸ்துவையும் ‘வேண்டா’ என்கிறாள் இப்பாசுரத்தால். ‘இதனை வேண்டா
என்பதற்குக் காரணம் என்?’ என்னில், ‘இது கிடக்குமாகில், இன்னமும் ஒரு பிறவி உண்டாய்ப்
2பழையவையும் எல்லாம் வந்து தோற்றி முலை எழுந்து நோவு படுகைக்குக் காரணமாய்
இருக்கும் ஆதலால், அதனைப் பற்ற’ என்க. 3இனித்தான், அவனுடைய நித்திய இச்சையாலே
அன்றோ இவ்வாத்துமாவினுடைய நித்தியமாய் இருக்குந் தன்மையும் உளது? அவனுக்கு இச்சை இல்லாத
போது பின்னை இவ்வாத்துமாவைக் கொண்டு காரியம் இல்லையே’ என்க.
(10)
420
உயிரினால் குறைஇல்லா
உலகுஏழ்தன் உள்ஒடுக்கித்
தயிர்வெண்ணெய் உண்டானைத்
தடங்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல்
இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம்சேர் பிறப்புஅறுத்து
வைகுந்தம் நண்ணுவரே.
பொ-ரை :
‘உயிர்களால் குறைவில்லாத ஏழ் உலகங்களையும் தன் வயிற்றினுள்ளே ஒடுக்கிக்கொண்டு, தயிரையும்
வெண்ணெயையும்
_____________________________________________________
1. ‘மேல், ‘வேண்டா’ என்றவற்றைக்காட்டிலும்
ஆத்துமாவுக்கு ஏற்றம் என்?’
என்ன, ‘இதற்கு முன்னர்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
2. ‘பழையவையும்’ என்றது,
பகவானுடைய சொரூப ரூப குண அனுபவங்களை.
‘முலை’ என்றது, ஸ்வாபதேசத்தில் பத்தியைக் குறித்தபடி.
3. ‘நித்தியமான
ஆத்தும வஸ்துவை வேண்டா என்றால், அது போமோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இனித்தான்’
என்று தொடங்கி.
|