உயர எ
உயர எழுந்தான்,’ என்கிறபடியே,
இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம்
அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று. இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே
நிலைநின்றான்’ என்று அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது
போதருகின்றதன்றோ?
1அங்ஙன்
அன்றிக்கே, ‘ஏறு ஆளும் இறையோனும்’ என்ற திருவாய்மொழியில் தம்முடைய ஆற்றாமைக்குக் கூட்டு
ஆவார் உளரோ என்று உலகத்தாருடைய செயல்களை ஆராய்ந்து மக்களைப் பார்த்தார்; அவர்கள், தாம்
சர்வேசுவரனிடத்தில் ஈடுபட்டவராய் இருப்பது போன்று, ஐம்புல இன்பங்களில் ஈடுபட்டவராய் அவற்றினுடைய
பேறு இழவுகளே லாபாலாபமாம்படி இருந்தார்கள்; அதனைக் கண்டவாறே 2வாளேறுகாணத் தேளேறு
மாய்ந்தாற்போலே, தம் இழவை மறந்தார்; இவர்களுடைய துக்கமே நெஞ்சிலே பட்டது; 3சர்வேசுவரனைப்
பார்த்தார்; அவன் முற்றறிவினனாய் அளவில்லா ஆற்றலையுடையவனாய்ப்
_____________________________________________________
1. இரண்டாவது ஆழ்வான் நிர்வாஹம்
: ‘ஆழ்வான் நிர்வாஹத்துக்குக் கருத்து,
‘கண்ணாளா! கடல் கடைந்தாய்!’ என்று அவன் குணங்களையும்
சொல்லி,
‘நண்ணாதார் முறுவலிப்ப’ என்று சமுசாரிகளுடைய இழவையும் அநுசந்தித்து,
‘இவை என்ன உலகியற்கை?’
என்று, ‘நீ இப்படிக் குணாதிகனாயிருக்க
இவர்கள் யாத்திரை இருந்தபடி என்!’ என்று விண்ணப்பம்
செய்ய, அவனும்,
‘இதனை விட்டு உம்முடைய பலத்தை நீர் கண்டுகொள்ளும்’ என்று
அருளிச்செய்ய,
‘ஆனால் இவர்களோடு சேர்ந்திருத்தல் தகாத காரியம்;
இவர்கள் நடுவில் இராதபடி திருவடிகளிலே சேர்த்துக்கொண்டருளவேணும்,’
என்று பிரார்த்திக்கிறார்,’ என்பது. இவர் நிர்வாஹத்தில், ‘கண்ணாளா! கடல்
கடைந்தாய்!’
என்பன போன்ற குண அநுசந்தானங்கள் எல்லாம்
பிறர்பொருட்டு எனக் கொள்க. ஆழ்வான் நிர்வாஹத்தை
அருளிச்செய்கிறார்,
‘அங்ஙன் அன்றிக்கே’ என்று தொடங்கி. ஆழ்வான் - கூரத்தாழ்வான்.
2. ‘வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற்போலே’
என்றார் களவியலுரைகாரர்.
3. ‘நெஞ்சிலே பட்டால்.
அவர்களுக்கு ஹிதம் அருளிச்செய்யலாகாதோ?’
என்ன, ‘சர்வேசுவரனை’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘ஆமாறு ஒன்றறியேன்
நான்’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றி, ‘அவன் முற்றறிவினன்’ என்றும்,
(தம்மை ‘ஆமாறு ஒன்று அறியேன்’ எனின், அவன் முற்றறிவினன்
என்பது
தானே போதருமன்றோ?’) ‘கடல் கடைந்தாய்’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றி ‘அளவிலாத
ஆற்றலையுடையவனாய்’ என்றும், ‘வள்ளலே’
என்றதனைத் திருவுள்ளம் பற்றிப் ‘பரம வள்ளலாய்’ என்றும்,
‘அரவணையாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘எல்லாருடைய
பாதுகாப்பிலும் விரதம் பூண்டிருக்குமவனாய்’
என்றும், ‘வினையேனை
உனக்கு அடிமை அறக் கொண்டாய்,’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
‘எல்லாக் குற்றங்களையும் பொறுக்குமவனாய்’ என்றும், ‘கண்ணாளா!’
என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
‘எல்லாரையும் நியமிக்கின்றவனாய்’ என்றும்
அருளிச்செய்கிறார்.
|