| New Page 1 
தோன்ற இருக்கும் 
1இருப்பைக் காட்டித் தந்து அங்கே உம்முடைய மனம் ஈடுபடும்படி செய்தோமாகில், இனி, உமக்குப் 
பேற்றுக்குக் 2குவால் உண்டோ? நாம் செய்ய வேண்டுவது என்?’ என்ன, 3இவை 
இரண்டனையும் நினைத்துத் தரித்துக் கிருதார்த்தராய்த் தலைக்கட்டுகிறார்,’ என்று பணிக்கும்
ஆழ்வான். 
    4ஆழ்வான், 
தாம் ஓரிடத்திலே வழியிலே போகா நிற்க, ஒரு பாம்பினாலே பிடிக்கப்பட்ட தவளையானது கூப்பிடாநிற்க, 
‘இது யார் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோகித்தாராம்; இவ்வாழ்வான் தன்மைக்குச் சேருமே 
இவர் நிர்வாஹமும். 
421 
நண்ணாதார் முறுவலிப்ப, 
நல்லுற்றார் கரைந்துஏங்க,எண்ணாராத் துயர்விளைக்கும் 
இவைஎன்ன உலகியற்கை?
 கண்ணாளா! கடல்கடைந்தாய்! 
உனகழற்கே வரும்பரிசு,
 தண்ணாவாது அடியேனைப் 
பணிகண்டாய் சாமாறே.
 
    பொ-ரை : 
‘பகைவர் மகிழ்ச்சி கொள்ளவும் சிறந்த உறவினர்கள் மனங்கரைந்து வருந்தவும் எண்ணுவதற்கு அமையாத 
துன்பத்தை உண்டாக்குகின்ற இவை என்ன உலகத்தின் தன்மை! கிருபையையுடையவனே! திருப்பாற்கடலைக் 
கடைந்தவனே! உன் திருவடிகளுக்கே 
_____________________________________________________ 
1. ‘இருப்பைக் காட்டித் 
தந்து’ என்றது, ‘ஒண்டொடியாள் திருமகளும்’ (430பா.) என்ற திருப்பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி.
 
2. குவால் - அதிகம். 
3. ‘இவை இரண்டனையும்’ என்றது, 
‘சமுசாரிகளோடு பொருந்தாதபடிசெய்தமையும், பிராட்டியும் தானுமான இருப்பைக் காட்டித் தந்தமையும்
 திருவுள்ளம் பற்றி,’ என்க.
 
      ஆழ்வான் நிர்வாஹத்திலே 
‘இவற்றையும் திருத்தி நல்வழிப் போக்கவேண்டும்’ என்பது கருத்து. எம்பார் நிர்வாஹம், 
‘கொடு உலகம்
 காட்டேலே’ என்றதிலே நோக்கு.
 
4. ஆழ்வாருடைய பேரருளைக் 
குறிக்கின்ற இந்நிர்வாஹம், பரம தயாளுவானஆழ்வான் தன்மைக்குச் சேரும் என்பதற்கு ஓர் ஐதிஹ்யம் 
காட்டுகிறார்,
 ‘ஆழ்வான்’ என்று தொடங்கி.
 
      இவ்விடத்தில், 
‘ஆழ்வாருக்கு மூன்று விதமான துன்பங்கள் உண்டு,’என்று அருளிச்செய்வர் பெரியோர்: பிரகிருதி 
சம்பந்தமான துன்பம், ‘முந்நீர்
 ஞாலம்’ என்ற திருவாய்மொழியிலே; பகவானைப் பிரிந்ததனால் 
உண்டான
 துன்பம், ‘சீலமில்லா’ என்ற திருவாய்மொழியிலே; சமுசாரிகள் இழவைக்
 கண்டு வாடும் 
துன்பம், இத் திருவாய்மொழியிலே.
 |