ஈ
ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 1மேல் எட்டுப் பாசுரங்களால் ‘இவ்வுலக இன்பம் நிலை அற்றது,’
என்றார்; இப்பாசுரத்தில். ‘உடலை வருத்தும் தன்மையையுடைய தவத்தைச் செய்து அந்தத் தவத்தின்
பலம் சுவர்க்கமாகக் கொண்டு சுவர்க்கத்தை அடையும்போது பகவானுடைய திருவருள் வேண்டும்; அவனுடைய
திருவருளால் சுவர்க்கத்தை அடைந்தாலும், அதனுடைய இயற்கையாலே நிலை நில்லாது,’ என்கிறார்.
இவன் தவத்தைச் செய்தற்குத்
தொடங்கும் போது விடுமவை சொல்லப்படுகின்றன மேல் : படி - பூமி. மன்னு பல்கலன் - முறையாக வந்த
பல வகைப்பட்ட ஆபரணங்களின் கூட்டம். அன்றிக்கே, ‘படி மன்னு பல்கலன்’ என்பதற்குத் 2‘தன்
குலத்திலுள்ளார் பரம்பரையாகப் பூண்டு போருகிற பல வகைப்பட்ட ஆபரணங்கள்’ என்னுதல். பற்றோடு
அறுத்து - அவற்றை நீக்கி விட்டு வாழ்தல் அன்றிக்கே அவற்றில் வாசனையும் போகை. ஐம்புலன் வென்று
- அவற்றில் ருசிக்குக் காரணமான ஐம்பொறிகளும் விஷயங்களிற்போகாதபடி வென்று. 3‘உன்னால்
முன்பு இந்திரியங்கள் வெல்லப்பட்டு மூன்று உலகங்களும் வெல்லப்பட்டன,’ என்றாள்
மண்டோதரி.
செடி மன்னு காயம் செற்றார்களும் - தவத்திற்காகப் பல காலம் ஒரோ ஆசனங்களிலே இருந்தால் சலியாமையாலே
உடம்பிலே தூறு மண்டும்படி சரீரத்தை ஒறுத்துத்
_____________________________________________________
1. பாசுரத்தில் ‘மீள்வர்கள்’
என்னுமளவும் கடாக்ஷித்து, அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. ‘ஏழ் படி கால்’ என்கிற
கணக்கிலே, படி என்பது வமிசமாய்,
‘வமிசத்திலுள்ளார் நித்தியமாகப் பூண்டு போந்த பல வகைப்பட்ட
ஆபரணங்கள்’ என்றவாறு. படி - படி படியாக என்றாக்கி, ‘வமிச
பரம்பரையாக’ என்றபடி.
3. உபாசகன் ஐம்பொறிகளையும்
அடக்கி ஆள வேண்டும்; ‘செல்வத்தை
விரும்புகின்றவனுக்கு விஷய அனுபவமன்றோ பலம்? அவனுக்கு
இந்திரியங்களை
அடக்குதல் வேண்டாவே?’ என்னும் வினாவைத்
திருவுள்ளம் பற்றி, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘உன்னால்’ என்று
தொடங்கி. இங்கு, செல்வத்தை விரும்பிய இராவணன் இந்திரிய நிக்ரஹம்
செய்தமை கூறப்பட்டுள்ளவாறு காண்க. இது, ஸ்ரீராமா. யுத். 114 : 18.
மண்டோதரி கூற்று.
|