முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
349

இருக்கிற 1என் வாசியைத் திருவுள்ளம் பற்றியருள வேண்டும்.  2உன் திருவடிகளில் சம்பந்தம் அறிந்த அன்று தொடங்கி உன்னைப் போன்று பிறருடைய துக்கத்தைப் பொறுக்க மாட்டாதபடியான என் வாசியைத் திருவுள்ளம் பற்றியருள வேண்டும்’ என்னுதல். ‘நன்று; ‘கூமாறே விரை கண்டாய்’ என்ற அளவில், ‘பிறருடைய துக்கம் பொறுக்க மாட்டாதவர்’ என்னுமிடம் தோற்றுமோ?’ என்னில், ‘இவை என்ன உலகியற்கை?’ என்று இந்த உலக வாழ்வினை நினைத்து வெறுத்து, என்னை அங்கே அழைக்க வேண்டும் என்கையாலே தோற்றுமே அன்றோ?     

(2)

423

கொண்டாட்டும் குலம்புனைவும் தமர்உற்றார் விழுநிதியும்
வண்டுஆர்பூங் குழலாளும் மனைஒழிய, உயிர்மாய்தல்
கண்டுஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டேபோல் கருதாது,உன் அடிக்கேகூய்ப் பணிகொள்ளே.

    பொ-ரை : ‘கடல் போன்ற நிறத்தையுடையவனே? மக்களால் கொண்டாடப்படுகின்ற கொண்டாட்டமும் குலத்தின் பெருமையும் பங்காளிகளும் உறவினர்களும் சிறந்த செல்வமும் வண்டுகள் தங்கியிருக்கின்ற மலர்களையுடைய கூந்தலையுடைய மனைவியும் வீட்டிலேயே தங்கியிருக்க, இறத்தலாகிற இந்த உலகியற்கையைக் கண்டு பொறுக்ககிலேன்! ஆதலால், அடியேனை முன்பு போலக் கருதாது உன் திருவடிகளிலே சேரும்படி அழைத்து அடிமை கொள்ளவேண்டும்,’ என்கிறார்.

    வி-கு : ஒழிதல் - ஈண்டு இறவாது தங்கியிருத்தல். ‘அகமென் கிளவிக்குக் கைம்முன் வரினே, முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்’ (தொல். எழுத். சூ. 315) என்றவிடத்து ‘ஒழிய’ என்பதூஉம் இப்பொருளிலேயே வந்திருத்தல் காண்க.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 3‘குலம் முதலானவைகள் எல்லாம் கிடக்க, இவை முடிகிறபடியைக் கண்டு பொறுக்க

_____________________________________________________

1. ‘என் வாசி’ என்றது, மயர்வற மதிநலம் பெற்றதனால் உண்டான
  வேறுபாட்டினை.

2. ஆழ்வான் நிர்வாஹத்துக்குச்சேரப் பொருள் அருளிச்செய்கிறார், ‘உன்
  திருவடிகளில்’ என்று தொடங்கி.

3. பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.