ம
மாட்டுகின்றிலேன்; துக்கம்
சிறிதும் இல்லாத உன் திருவடிகளிலே அடிமை கொள்ள வேண்டும்,’ என்கிறார்.
கொண்டாட்டும் -
முன்பு ‘இன்னான்’ என்று அறிய ஒண்ணாதபடி பொருள் அல்லாதானாய்ப் போந்தான் ஒருவன் சிறிது வாழப்
புக்கவாறே ‘முதலியார்’ என்றாற் போலே சொல்லுவார்கள். 1‘பயிலும் திருவுடையார்’
என்றே அன்றோ இவர்கள் கொண்டாடும் விஷயம்? குலம் புனைவும் - நல் வாழ்வு வாழப் புக்க அன்று
தொடங்கி இவனுக்கு ஒருகுலம் உண்டாகத் தொடுத்துச் சொல்லுவர்கள். தமர் - 2முன்பு
‘இவனோடு நமக்கு ஓர் உறவு உண்டாகச் சொல்லுமது சாலத் தண்ணிது’ என்று போனவர்கள் இவன் வாழப்
புக்கவாறே உறவு சொல்லிக்கொடு வந்து கிட்டுவார்கள், ‘அவன் தமர்’ என்று தமக்குத் தமர்
புறம்பே அன்றோ? உற்றார் - 3முன்பு, ‘இவனோடு சம்பந்தம் செய்து கோடல் தரம்
அன்று; நிறக்கேடாம்,’ என்று போனவர்கள், இப்போது ‘இவனோடு ஒரு சம்பந்தம் பண்ணினோமாக வல்லோமே!’
என்று ஆதரித்து மேல் விழுவர்கள். விழு நிதியும் - நினைவின்றிக்கே இருக்கச் செய்தே சருகிலை
திரளுமாறு போலே சீரிய நிதி வந்து கைப்புகுருமே; அச்செல்வத்திற்குப் போக்கடி காணாமல்,
4செய்வது அறியாமல், அதனை முன்னிட்டு ஒரு பெண்ணை மணந்துகொள்வான்; அவள்தான் வண்டு ஆர்
பூங்குழலாள் ஆயிற்று. இவள் செவ்விவண்டே உண்டு போமித்தனை
_____________________________________________________
1. ‘‘முதலியார்’ என்றாற்போலே
சொல்லுவது, ‘கொண்டாட்டம்’ அன்றோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பயிலும் திருவுடையார்’
என்று
தொடங்கி. என்றது, ‘சர்வேசுவரன் அடியார்கள் என்று அவர்களைக்
கொண்டாட வேண்டியிருக்க,
இவர்கள் ஒரு கொண்டாட்டத்தை
உண்டாக்கிக்கொள்வதே!’ என்றபடி. ‘பயிலும் திருவுடையார்’ என்பது,
திருவாய் 3. 7 : 1.
2. ‘தமர்’ என்ற
சொல்லுக்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘முன்பு’ என்று
தொடங்கி. இதற்கு மறுதலையாக பாவம்
அருளிச்செய்கிறார், ‘அவன் தமர்’
என்று தொடங்கி. இது, முதல் திருவந். 55.
3. ‘உற்றார்’ என்ற
சொல்லுக்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘முன்பு இவனோடு’
என்று தொடங்கி.
4. ‘செய்வதறியாமல்’
என்றது, ‘‘நாம் முதுமைப் பருவத்தை அடைந்தோம்;
நாம் பெண்ணை மணந்தால் இன்பம் நுகர்வதற்கு
நமக்குத் தகுதியில்லை;
ஆதலால், ஒரு தர்மத்தைச் செய்து உஜ்ஜீவிப்போம்,’ என்று நினையாமல்
ஒரு பெண்ணை மணப்பான்,’ என்றபடி.
|