New Page 1
போக்கித் தான் உண்ண
மாட்டான் ஆதலின், ‘வண்டார் பூங்குழலாள்’ என்கிறது. ‘என்னை?’ எனின், இன்பத்திற்குத்
தகுதியில்லாத பருவத்திலே ஆயிற்றுத் தான் அவளை மணந்துகொண்டது. 1‘சேலேய் கண்ணியரும்
பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய் தந்தையும்’ இவை எல்லாம் சர்வேசுவரனேயன்றோ
இவருக்கு?
மனை ஒழிய - அவளுக்கும்
தனக்கும் ஏகாந்தமாக அனுபவிக்கைக்குத் தன் ஆற்றல் எல்லாம் கொண்டு 2பல நிலமாக
அகத்தை எடுப்பான். உயிர் மாய்தல் - 3இவை குறி அழியாதிருக்க, இவளைக் கூட்டோடே
கொடுத்து, இப்படிப் பாரித்த தான் முடிந்து போவான். கண்டு ஆற்றேன் உலகு இயற்கை -இப்படிப்பட்ட
உலக வாழ்வினை என்னால் பொறுக்கலாய் இருக்கிறதில்லை. கடல் வண்ணா - 4இந்த
உலக வாழ்க்கையின்படி அன்றிக்கே அனுபவிக்கலாவதும் ஒரு படி உண்டே. இவர்கள் துக்கத்தை நினைத்தலால்
வந்த துன்பம் தீரச் சிரமஹரமான உன் வடிவைக் காட்டியருளாய். அடியேனைப் பண்டே போல் கருதாது -
‘பொய்ந்நின்ற ஞானம்’ என்ற பாசுரத்தில் ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்ற அளவாக
என்னைத் திருவுள்ளம் பற்ற ஒண்ணாது. ‘என்னை?’ எனின், பகவத் விஷயத்தில் மூழ்கிச்
சொல்லுகிற சொல், மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைப் பார்த்துச் சொல்லுகிற சொற்களைப்
போன்று இராதே அன்றோ? 5சிற்றாள் கொண்டார், இவர்க்காகில் இது
____________________________________________________
1. மேலே கூறியவற்றிற்கெல்லாம்
மறுதலையாக, பாவம் அருளிச்செய்கிறார்,
‘சேலேய் கண்ணியரும்’ என்று தொடங்கி. இது, திருவாய்.
5. 1 : 8.
2. பல நிலமாக - உபரிகையின்மேல்
உபரிகையாக.
3. ‘இவை’ என்றது, பாசுரத்தின்
முதல் இரண்டடிகளின் கூறியவற்றை.
கூட்டோடே -சரீரத்தோடே.
4. ‘கடல் வண்ணா’ என்பதற்கு,
எம்பார், ஆழ்வான் நிர்வாஹங்களுக்கு ஏற்ப,
இரு வகையாக பாவம் அருளிச்செய்கிறார், ‘இந்த
உலக வாழ்க்கையின்’
என்று தொடங்கி்.
5. மேற்கூறிய பொருளுக்கு
ஆப்த சம்வாதம் காட்டுகிறார், ‘சிற்றாள்
கொண்டார்’ என்று தொடங்கி. சேர்க்கைப்பல்லி -
நிலைப்பல்லி, ‘சேர்க்கைப்
பல்லி ஓர் இடத்திலேயே பலகால் சொல்லிக் கொண்டிருக்கும்; அந்தப்
பல்லி
போலே, இவர்க்கும் இது பணி அன்றோ?’ என்று இருக்க ஒண்ணாது
என்கிறார் என்றபடி.
|