New Page 1
சேர்க்கை பல்லி
போலே பணியன்றோ என்று இருக்க ஒண்ணாது,’
என்கிறார் என்றாராம்.
1அன்றிக்கே,
மேலே, ‘உன்னைப் பிரிந்து கூப்பிட்ட அவ்வளவாக நினைக்க ஒண்ணாது, பிறருடைய துக்கத்தைக் கண்டு
கூப்பிடுகின்ற இதனை,’ என்னலுமாம். உன் திருவடிக்கே கூய்ப் பணி கொள்ளே - உன் திருவடிகளிலே
அழைத்து என்னை அடிமை கொண்டருளவேண்டும். 2உன் திருவடிகளிலே அழைத்தாலும், அடிமையின்
இனிமை அறியில் அன்றோ நான் மீளாதொழிவது? ஆன பின்னர், என்னை நித்திய கைங்கரியம் கொண்டருளவேண்டும்,’
என்னுதல்; அன்றிக்கே, ‘சோற்றையிட்டுப் பணிகொள்’ என்னுமாறு போலே, ‘கூய்ப் பணிகொள்’
என்கிறார் என்னுதல்.
(3)
424
கொள்என்று கிளர்ந்துஎழுந்து
பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள்என்று தமம்மூடும்;
இவைஎன்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா!
உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல்செய்து
அடியேனை உனதுஅருளால் வாங்காயே.
பொ-ரை :
‘‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று கிளர்ந்து வருகின்ற பெரிய செல்வமானது, நெருப்பைப்
போன்று தங்களையழிக்க, பின்னையும் செல்வத்தைக் கொள்வாய் என்று பிறர் சொன்ன அளவிலே அறிவின்மையால்
மூடப்பட்டு அச்செல்வத்தை விரும்புகின்ற இவை என்ன உலகு இயற்கை! வள்ளலே! மணி வண்ணா! உன் திருவடிகட்கே
வரும்படி திருவருளைச்செய்து அடியேனை உன் திருவருளால் கைக்கொண்டருள வேண்டும்,’ என்கிறார்.
வி-கு :
‘நெருப்பாக’ என்றது, ‘நெருப்பைப்போன்று இருக்க’ என்பது பொருள். ‘என்று’ என்பது, செயவென் எச்சத்திரிபு.
‘கொள்ளென்று தமம் மூடும்’ என்ற இடத்தில் ‘கொள்ளென்று தூண்டுதல், மனம்’ என்று கோடலுமாம்.
_____________________________________________________
1. ஆழ்வான் நிர்வாஹத்திற்குத்
தகுதியாக அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’
என்று தொடங்கி.
2. ‘உன்னடிக்கே
கூவாய்’ என்னாது, ‘கூய்ப் பணிகொள்’ என்றதற்கு வேறும்
ஒரு பாவம் அருளிச்செய்கிறார், ‘உன் திருவடிகளிலே
என்று தொடங்கி.
முன்னைய கருத்து, ‘பரமபதத்திலே அழைத்துக் கைங்கரியம்
கொள்ளவேணும்’ என்பது.
இரண்டாவது கருத்து, கூவுதல் - கூவுதலாய்,
‘ஏவிப்பணி கொள்ளவேணும்’ என்பது. அதாவது, ‘வார்த்தை
தாரகம்’
என்றபடி.
|