முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
353

    ஈடு : நான்காம் பாட்டு. 1‘மக்கள், செல்வத்தை விரும்பினால், அது அழிவிற்குக் காரணமாதலைக் காணாநிற்கச் செய்தேயும், மீண்டும் அந்தச் செல்வத்தை விரும்புதலே இயல்பாம்படி இருக்கிற இதற்குக் காரணம் யாதோ? நான் இது கண்டு பொறுக்கமாட்டுகின்றிலேன்: முன்னம் என்னை இவர்கள் நடுவினின்றும் வாங்க வேண்டும்,’ என்கிறார்.

    கொள் என்று கிளர்ந்து எழுந்த பெருஞ்செல்வம் - இவன் தான் விரும்பாதிருக்கச்செய்தேயும் ‘கொள், கொள்’ என்று 2மொண்டெழு பானைபோலக் கிளர்ந்து வருகிற எல்லைஇல்லாத செல்வமானது. நெருப்பாக - 3‘அடியோடு அழிய’ என்னுதல்; 4அன்றிக்கே ‘தன்னுடைய அழிவிற்குக் காரணமாக’ என்னுதல். ‘செல்வம் அழிவிற்குக் காரணமாதல் யாங்ஙனம்?’ எனின், ‘இவன் வாழ்கிறான்’ என்கிற இது கேட்டுப் பொறுக்க மாட்டாமலே அன்றோ பிறர் இவனை அழிக்க வருவது? ஆதலால், தன் அழிவிற்குச் செல்வம் காரணமாதல் காண்க. கொள் என்று தமம் மூடும் - 5இப்படிச் செல்வமானது அழிவிற்குக் காரணமாதலைக் காணச் செய்தேயும், பிறர் இவனைக் ‘கொள், கொள்’ என்று தூண்ட, அறிவின்மையால் மூடப்பட்டவனாய் பேராசையாலே முன்பு அழிவிற்குக் காரணமான அச்செல்வத்தை ஏற்றுக்கொள்வான். ‘அறிவின்மையால்

_____________________________________________________

1. முன் இரண்டு அடிகளால் பலித்த பொருளை அருளிச்செய்யா
  நின்றுகொண்டு, ‘வாங்காய்’ என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. மொண்டெழுபானை - ஏற்றப்பானை.

3. ‘அடியோடு அழிய’ என்றது, ‘நெருப்பு அழியும்போது அடியோடு அழியுமாறு
  போன்று, இச்செல்வமும் அடியோடு அழிய’ என்றபடி.

4. நெருப்பு, ‘சேர்ந்தாரைக்கொல்லி’ ஆகையாலே, அப்படியே செல்வமும் தான்
  சேர்ந்திருக்கின்ற ஒருவனை அழிப்பிக்கும் என்று கூறத் திருவுள்ளம் பற்றி
  அதனை அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. ஆக,
  ‘நெருப்பாக’ என்றதற்கு இரண்டு வகையான கருத்து அருளிச்செய்தபடி.

5. ‘கொள்ளென்று தமம் மூடும்’ என்பதற்கு மூன்று வகையாகக் கருத்து
  அருளிச்செய்கிறார். முதல் கருத்து, ‘இப்படிச் செல்வமானது’ என்று
  தொடங்கும் வாக்கியம். இரண்டாவது கருத்து, ‘அன்றிக்கே’ என்று
  தொடங்கும் வாக்கியம். மூன்றாவது கருத்து, ‘அன்றிக்கே, இது அழிவிற்குக்
  காரணமாம்’ என்று தொடங்கும் வாக்கியம்.