என
என்பார், ‘மணி வண்ணா’
என்கிறார் என்னலுமாம். உன கழற்கே வரும் பரிசு - 1ஞானலாப மாத்திரத்தால்
போதுமா? பேற்றினைப் பண்ணித் தரவேண்டாவோ? 2மயர்வுஅற மதிநலம் அருளினதைப்
போன்று, துயர்அறு சுடரடி தொழுது எழப் பண்ண வேண்டாவோ? பசியை விளைத்தால் சோறு இட வேண்டாவோ?
வள்ளல் செய்து - உன் திருவடிகளிலே நான் வந்து கிட்டும்படியாக ஒளதார்யத்தைப் பண்ணி. என்றது,
‘இவன் இப்பேற்றைப் பெறுவான்,’ என்று அங்கீகரித்து, என்றபடி. அடியேனை - 3‘பிறர்
உடைமை நசியாமல் நோக்க வேண்டும்’ என்று பிரார்த்திக்கின்ற என்னை. உனது அருளால் - மயர்வு
அற மதிநலம் அருளினதைப் போன்று பேற்றுக்கும் தனியே ஓர் அருளைச் செய்யவேண்டும். ‘வாங்காய்’
என்று அஃறிணையைப் போன்று சொல்லுகிறார். அதற்கு அடி, இத்தலையில் பரமபத்தி பர்யந்தமாகப்
பிறந்தாலும், 4பெறுகிற பேற்றின் கனத்தைப் பார்த்தால், அத்தலையின் அருளாலே பெற்றதாம்படி
இருக்கையாலே.
(4)
425
வாங்குநீர் மலர்உலகில்
நிற்பனவும் திரிவனவும்
ஆங்குஉயிர்கள் பிறப்பிறப்புப்
பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்;
ஈங்குஇதன்மேல் வெந்நரகம்;
இவைஎன்ன உலகியற்கை!
வாங்குஎனைநீ, மணிவண்ணா!
அடியேனை மறுக்கேலே.
பொ-ரை :
‘வளைந்த கடலாற்சூழப்பட்ட பரந்த உலகத்திலே நிற்பனவும் திரிவனவுமான அவ்வவ்விடங்களிலே வசிக்கின்ற
உயிர்கள் பிறப்பாலும் இறப்பாலும் வியாதியாலும் வருந்தாநிற்கும்; ஈங்கு இதற்குமேலே கொடிய
நரகமுமாம்; இவை என்ன உலகு இயற்கை!
_____________________________________________________
1. ‘வள்ளலே’ என்றதற்கு
அருளிச்செய்த முதற்பொருளுக்குச் சேர, பாவம்
அருளிச்செய்கிறார், ‘ஞானலாபம்’ என்று தொடங்கி.
2. ‘ஞானலாபம் பண்ணித்
தந்தால், பேற்றினைப் பண்ணித் தர வேண்டுமோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘மயர்வற’ என்று தொடங்கி.
அதற்கே ஒரு திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘பசியை விளைத்தால்’
என்று
தொடங்கி.
3. பிறருடைமை - உனது
உடைமை. முன்னிலையைப் படர்க்கையாக வைத்துக்
கூறியது.
4.
‘பெறுகிற பேறு’ என்றது, அத்வேஷம் தொடங்கிக் கைங்கரிய பரியந்தமாக
வருகிற பலத்தைக் குறித்தபடி.
|