சுக
சுகாநுபவம் பண்ணித் திரிந்ததைப்
போன்றது அன்றே அங்குப் போனால் படும் துக்கம்?’ என்பார், ‘வெந்நரகம்’ என்கிறார்.
என்றது, ‘துன்பத்தை இன்பமாக மயங்கும் மயக்கத்தாலாவது இன்பம் உண்டு இங்கு; அங்கு, வடிகட்டிய
துக்கமே ஆயிற்று உள்ளது,’ என்றபடி. 1உயிர்க்கழுவில் இருக்குமவன் நீர் வேட்கை
கொண்டு தண்ணீரும் குடித்து நீர் வேட்கை நீங்கினவனாய் இருக்குமாறு போன்றதே அன்றோ இங்குள்ளவை?
அதுவும் இல்லை அங்கு. இவை என்ன உலகு இயற்கை - இது ஓர் உலக வாழ்வினைப் பண்ணி வைக்கும்படியே!
‘ஆனால், உமக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்ன, ஆங்கு வாங்கு எனை - 2‘நினைவிற்கும்
எட்டாத உலக நாதரானா ஸ்ரீ விஷ்ணுவானவர் நித்தியர்களாலும் முத்தர்களாலும் சூழப்பட்டுப் பிராட்டியோடுகூட
ஸ்ரீ வைகுண்டம் என்கிற மேலான உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்,’ என்கிறபடியே. ஏழுலகும்
தனிக்கோல் செல்ல நீ வீற்றிருக்கிற இடத்திலே என்னை வாங்கவேண்டும். மணி வண்ணா - 3ஐம்புல
இன்பங்களிலே ஈடுபாடு உடையவனாய் அவற்றின் வடிவிலே துவக்குண்டு இருக்கிற என்னை, ‘அவ்வடிவை நாய்க்கு
இடாய்?’ என்னும்படியான உன் வடிவைக் காட்டிக் கொண்டு போகவேண்டும். 4‘மனைப்பால்,
பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார் அத்தோள்,’ என்கிறபடியே,
இவன் படியைக்கண்டால் வேறு ஒன்றும் பிடியாதே அன்றோ? அடியேனை - 5உன் படி அறிந்த
என்னை; என்றது, ‘நீயும் அவ்வோலக்கமுமாய் இருக்கிற
_____________________________________________________
1. ‘இங்கு ‘இன்பமாக மயங்கும்
மயக்கம்’ என்பது என்? சுகானுபவம்
காண்கின்றோமே?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘உயிர்க்கழு’
என்று தொடங்கி. உயிர்க்கழு - உயிரை வாங்கும் கழுமரம்.
2. ‘ஆங்கு’ என்பது, பிரமாணப்
பிரசித்தியாலே பரமபதத்தைக் காட்டுகிறது.
அதற்குப் பிரமாணத்தைக் காட்டுகிறார், நினைவிற்கும்
எட்டாத’ என்று
தொடங்கி.
3. ‘எனை மணி வண்ணா
வாங்கு’ என்று கூட்டிப் பொருள் அருளிச்செய்கிறார்,
‘ஐம்புல இன்பங்களிலே’ என்று தொடங்கி.
4. ‘இதர விஷயங்களை நீக்கலாம்படி
அவன் வடிவழகு இருக்குமோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘மனைப்பால்’ என்று தொடங்கி.
இது,
இரண்டாந்திருவந். 42.
5. ‘மணி வண்ணா’
என்றதனைக் கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார், ‘உன்
படி’ என்று தொடங்கி. படி : சிலேடை.
|