முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
358

இருப்பில் இனிமை அறிந்த என்னை’ என்றபடி. மறுக்கேலே - 1பிறப்பு மூப்பு மரணம் முதலியவைகளாலே நெருக்கு உண்கிற இவர்கள் நடுவே இருந்து நெஞ்சு மறுகாதபடி பண்ணவேண்டும். என்னைக் கலங்கப் பண்ணாதே கொள். தெளிவிசும்பிலே வாங்கியருளவேண்டும். ‘உனக்கே உரியராய் அடியருமாய் இருப்பாரைக்கொண்டு லீலாரசம் அனுபவிக்கக் கடவதோ?’ என்பார், ‘அடியேனை மறுக்கேல்’ என்கிறார்.

(5)

426

மறுக்கிவல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப்பொருளை அறிந்துஓரார்; இவைஎன்ன உலகியற்கை!
வெறித்துளவ முடியானே! வினையேனே உனக்குஅடிமை
அறக்கொண்டாய் இனிஎன்னா ரமுதே!கூய் அருளாயே.

    பொ-ரை : ‘உலகத்து மக்கள் ஒருவரை ஒருவர் மனத்தினைக் கலக்கிக் கொடிய வலையிலே அகப்படச் செய்து வருத்திப் பின்கொன்று அவர்கள் பொருள்களைக்கொண்டு தாங்கள் ஜீவிப்பர்; தர்மமாகிற பரம புருஷார்த்தத்தை அறிந்து அதனை ஆராயார். இவை என்ன உலகியற்கை! வாசனை பொருந்திய திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடையவனே! தீவினையையுடைய என்னை உனக்கே அடிமையாகும்படி செய்தவனே! உனக்கு அடிமையான பின்பு, எனக்கு அரிய அமுதமாய் இருப்பவனே! அழைத்துக்கொண்டருள வேண்டும்,’ என்கிறார்.

    வி-கு : ‘ஓரார்’ என்பதற்கு மக்கள் என்னும் எழுவாயை வருவித்து முடிக்க. ‘உண்பர், ஓரார்’ என்க. வெறி - வாசனை.

    ஈடு : ஆறாம் பாட்டு. ‘இம்மாக்களுடைய 2பகவத்வைமுக்யாதி தோஷங்களை நினைத்து ஈசுவரனை இன்னாதாகை

_____________________________________________________

1. ஆழ்வான் நிர்வாஹத்துக்குச் சேரப் பொருள் அருளிச்செய்கிறார், ‘பிறப்பு
  மூப்பு’ என்று தொடங்கி. எம்பார் நிர்வாஹத்துக்குச் சேரப் பொருள்
  ‘என்னைக் கலங்கப் பண்ணாதேகொள்’ என்பது; என்றது, ‘சமுசாரிகளுடைய
  வியாபாரங்களைக்கண்டு நான் கலங்காதபடி செய்ய வேணும்,’ என்றபடி.
  ‘ஆங்கு எனை வாங்கு’ என்றதனைக் கடாக்ஷித்து, பாவம்
  அருளிச்செய்கிறார், ‘தெளிவிசும்பிலே வாங்கியருளவேணும்’ என்று.

2. பகவத்  வைமுக்யாதி தோஷங்கள் - பகவானிடத்தில் விருப்பமில்லாமை
  முதலிய
குற்றங்கள். இன்னாதாகை - துன்புறுதல்.