க
கரைந்ததற்குப் பிரயோஜனம்
என்? அதனை விடலாகாதே?’ என்னை முதல் அங்கே அழைத்துக்கொண்டருளவேண்டும்,’ என்னுதல்.
(6)
427
ஆயேஇவ் உலகத்து நிற்பனவும்
திரிவனவும்
நீயேமற்று
ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயேமூப்பு இறப்பிறப்புப்
பிணியேஎன் றிவைஒழியக்
கூயேகொள் அடியேனைக்
கொடுஉலகம் காட்டேலே.
பொ-ரை :
‘இந்த உலகத்திலே நிற்கின்ற பொருள்களும் திரிகின்ற பொருள்களும் நீயேயாகி, உன்னைத் தவிர
வேறு ஒரு பொருளும் இல்லாதபடி நீ நின்ற காரணத்தாலே, நோய் மூப்பு இறப்புப் பிறப்புப் பிணி என்ற
இவைகள் ஒழியும்படியாக அடியேனைக் கூவிக் கொள்வாய்; இந்தக் கொடிய உலகத்தை எனக்குக் காட்டாதே,’
என்கிறார்.
வி-கு :
முதலிலே உள்ள ‘ஆய்’ என்ற சொல்லை ‘நீயே’ என்ற சொல்லோடு சேர்த்து, ‘நீயேயாய் நின்றமையால்’
எனக் கூட்டுக. ஆய் -வினையெச்சம். அன்றி, ‘ஆயே’ என்பதனை விளிப்பெயராகக் கோடலுமாம்.
‘நின்றமையால் இவை ஒழிய அடியேனைக் கூயே கொள்,’ என்க. என்றது, ‘சரீரத்திற்கு வருகின்ற நோய்
முதலானவைகளை ஆத்துமா நீக்குவது போன்று, உனக்குச் சரீரமாய் இருக்கின்ற எனக்கு வரும் நோய் முதலானவற்றையும்
சரீரியாகிய நீயே நீக்க வேண்டும்,’ என்பது கருத்து.
ஈடு :
ஏழாம் பாட்டு, 1விரும்பியவை அப்போதே கிட்டாமையாலே, ‘பேறு தம்மதான பின்பு தாமே
முயற்சி செய்து வருகிறார்,’ என்று இறைவன் நினைத்தானாகக் கொண்டு, ‘எல்லாப் பொருள்களும்
உனக்கு அதீனமான பின்பு நீயே உன்னைக் கிட்டும் வழி பார்த்தருள வேண்டும்,’ என்கிறார்.
ஆயே - தாயே! என்றபடியாய்,
2‘மாதா பிதா’ என்கிறபடியே, ‘எனக்கு எல்லாவிதமான உறவின் கூட்டமும் ஆனவனே!’ என்கிறார்.
அன்றிக்கே, ‘இவ்வுலகத்து
_____________________________________________________
1. நீயே - கூயே கொள்’
என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2.
சுபாலோபநிடதம். ‘தாயும் தகப்பனும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும்
இரட்சகனும் சினேகிதனும்
பேறும் எல்லாம் நாராயணனே,’ என்பது
அவ்வுபநிடத வாக்கியத்தின் பொருள்.
|