ந
நிற்பனவும் திரிவனவும்
நீயே ஆய்’ என்று கொண்டு கூட்டி, இந்த உலகத்திலே தாவரங்களாயும் சங்கமங்களாயும் கூடியிருக்கின்ற
எல்லாப்பொருள்களும் ‘நீ’ என்கிற சொல்லுக்குள்ளே ஆம்படி சரீரமாய் அற்று, 1நீ
ஒருவனுமே சரீரியாய்’ என்று பொருள் கோடலுமாம். ‘உலகம் பரமாத்துமாவுக்குச் சரீரம் என்ற புத்தி
எப்பொழுது இவனுக்கு உண்டாகிறதோ, அப்பொழுது தனித்த ஒரு சாதனத்தாலே, தனித்த ஒருவனைப்
பார்க்கக் கடவன்,’ என்பது உபநிட வாக்கியம்.
2மற்று
ஒரு பொருளும் இன்றி - ‘இவ்வுலகில் பல பொருள்கள் பரமாத்துமாவை நீங்கித் தனித்து இயங்குகின்றன
என்று எவன் எண்ணுகிறானோ, அவன் நனி பேதை ஆவான்; (ஆதலால்) இவ்வுலகில் பல இல்லை என்று
மனத்தால் எண்ணக்கடவன்,’ என்று சொல்லுகிறபடியே, பரம்பொருளினின்றும் நீங்கி நிற்பதாய்ச்
சுதந்தரமாய் இருப்பது ஒரு பொருளை ஆயிற்று, ஈண்டு ‘இல்லை’ என்கிறது. நீ நின்றமையால் - நீ இப்படி
நின்ற பின்பு. நோயே மூப்பு இறப்புப் பிறப்புப் பிணி என்ற இவை ஒழிய - 3சரீரத்துக்கு
வந்தவற்றுக்குச் சரீரியான ஆத்துமா இன்புறுதல் துன்புறுதல் செய்யுமதனைப் போன்று, எனக்கு வந்தவற்றுக்கு
இன்புறல் துன்புறல் செய்வாய் நீ ஆம்படி சம்பந்தம் உண்டாய் இருந்த பின்பு, பிறவி காரணமாக
வருகின்ற இந்தத் துன்பங்களைக் கழித்து. 4நோயும் பிணியும் - ஆதி வியாதிகள்.
கூயே கொள் - ‘இவன் தானே வருகிறான்,’ என்று இராமல், நீயே அழைத்துக்கொண்டருள வேண்டும்.
கொடு உலகம் -
_____________________________________________________
1. ‘நீ ஒருவனுமே சரீரமாய்’
என்றது, சாமாநாதிகரண்யம்; சரீர சரீரி பாவ
நிபந்தனம். இதற்குப் பிரமாணம்,
‘உலகம் பரமாத்துமாவுக்கு’ என்று
தொடங்குவது. இது, பிரு. உப. 6 : 5.
2. ‘‘மற்று ஒரு
பொருளுமின்றி’ என்றதனால், சொரூப ஐக்கியம்
சொல்லுகிறதோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘இவ்வுலகில்
பல பொருள்கள்’ என்று தொடங்கி. இது, கடவல்லி, உப, 2. 4 : 11.
3. இப்போது, சரீர சரீரி
பாவம் சொன்னதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘சரீரத்துக்கு’ என்று தொடங்கி.
4. நோய்க்கும்
பிணிக்கும் வேறுபாடு காட்டுகிறார், ‘நோயும் பிணியும்’ என்று
தொடங்கி. ‘ஆதி வியாதிகள்’ என்றது,
ஆதியும் வியாதியும் என்றபடி. ஆதி
- மனோ வியாதி. வியாதி - உடல் நோய்.
|