முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
364

428

428

காட்டிநீ கரந்துஉமிழும் நிலம்நீர்தீ விசும்புகால்
ஈட்டிநீ வைத்து அமைத்த இமையோர்வாழ் தனிமுட்டைக்
கோட்டையினிற் கழித்துஎனைஉன் பொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?

    பொ-ரை : ‘நீ உலகத்தை உண்டாக்கிக் காட்டிப் பிரளயம் வந்தவாறே உண்டு மறைத்துப் பிரளயம் நீங்கினவாறே வெளிநாடு காண உமிழ்ந்த நிலமும் நீரும் தீயும் ஆகாயமும் காற்றும் ஆகிய ஐந்து பூதங்களையும் சேர்த்துச் சமைத்து வைத்த, தேவர்கள் வாழ்கின்ற ஒப்பற்ற அண்டமாகிற கோட்டையினின்றும் நீக்கி என்னை உன்னுடைய மிக்க ஒளியோடு கூடிய பரமபதத்திலே பெறுதற்கு அரிதான திருவடிகளிலே எப்பொழுது கூட்டுவாய்?’ என்கிறார்.

    வி-கு : ‘உமிழும் முட்டை, வைத்து அமைத்த முட்டை, இமையோர் வாழ் முட்டை, தனி முட்டை’ என்று தனித்தனியே கூட்டுக. முட்டை - அண்டம். கொழுஞ்சோதி உயரம் - பரமபதம்.

    ஈடு : எட்டாம் பாட்டு. 1‘நாமே செய்யப் புக, நீர் ‘வேண்டா’ என்றவாறே அன்றோ தவிர்ந்தது? இதற்கு நம்மைக் காற்கட்ட வேண்டுமோ?’ என்ன, ‘செய்யக் கடவதாகில், அது செய்வது என்று?’ என்கிறார். ‘எம் மா வீட்டுத் திறமும் செப்பம்’ என்றாரே முன்னர்.

    காட்டி - முன்பு 2தானே தான் ஆம்படி இவற்றை அடையத் தன் பக்கலிலே சேர்த்துச் ‘சத்’ என்னும் நிலையினதான உலகத்தை, 3‘பிரமன் முன்னிருந்தபடியே படைத்தான்,’ என்கிறபடியே, இதனை உண்டாக்கிக் காட்டி. ‘காட்டி’ என்ற சொற்போக்கால், 4‘ஐந்திரஜாலிகரைப் போலே இதனை உண்டாக்கிக் காட்டுகிறான்’ என்பது

_____________________________________________________

1. ‘எஞ்ஞான்றும் கூட்டுதி?’ என்று காலாவதி கேட்கும் போது செய்கை
  நிச்சயிக்கப்பட்டதாக வேண்டுகையாலே, அதற்குத் தகுதியாக அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. ‘தானே தான் ஆம்படி’ என்றது, ‘தானே அழிக்குமிடத்தில், தானாம்படி
  இவற்றை அடையத் தன் பக்கலிலே சேர்த்துக்கொண்டு’ என்றபடி.

3. தைத்திரீய நாரா. 1.

4. ‘ஐந்திரஜாலிகரைப் போலே’ என்றதனை, ‘ஐந்திரஜாலிகர் ஒருவரும்
  அறியாமல் சில பொருள்களை விழுங்கி அவற்றைப் புறப்பட விடுமாறு
  போலே’ என விரித்துப் பொருள் காண்க.