| என 
என்கிறபடியே. விரோதியைப் 
போக்கிலும் இவனைப் பற்ற வேண்டும்: தன்னைப் பெறிலும் தன்னாலேபெறவேண்டும். 1‘ஒரு 
குருவி பிணைத்த பிணை ஒருவராலவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை; ஒரு சர்வசத்தி, கர்மத்திற்குத் தகுதியாகப் 
பிணைத்த பிணையை. அவனைக் காற்கட்டாதே இவ்வெலி எலும்பனான சமுசாரியால் அவிழ்த்துக் 
கொள்ளப்போமோ?’ என்று பணிப்பர் பிள்ளை திருநறையூர் அரையர்.  
(8) 
429 
கூட்டுதிநின் குரைகழல்கள்; 
இமையோரும் தொழாவகைசெய்து,ஆட்டுதிநீ; அரவணையாய்! 
அடியேனும் அஃதுஅறிவன்;
 வேட்கைஎலாம் விடுத்துஎனைஉன் 
திருவடியே   சுமந்துஉழலக்
 கூட்டரிய திருவடிக்கள் 
கூட்டினைநான் கண்டேனே.
 
    பொ-ரை : 
‘ஞானமில்லாதவரேயாயினும், நீ உகந்தாரை’ ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிகளிலே கூட்டிக்கொள்ளுகின்றாய்; 
நீ உகவாதாரை, அவர்கள் தேவர்களேயாயினும், உன்னைத்தொழாதபடி செய்து விஷயங்களிலே திரியும்படி 
செய்கின்றாய்; அதனை அடியேனும் அறிவேன்: அரவணையாய்! வேட்கை எல்லாம் விடுத்து உன் திருவடிகளையே 
சுமந்து திரியும்படியாக, தன் முயற்சியால் ஒருவராலும் அடைய முடியாத திருவடிகளிலே என்னைச் சேர்த்தாய்; 
நான் பார்த்தேன்,’ என்கிறார். 
    வி-கு :
‘குரைகழல்கள் கூட்டுதி,’ என்க. பின்னர், 
‘இமையோரும்’ என வருவதனால், இங்கு ‘ஞானமில்லாத சிறியாராயினும் அவர்களை’ எனச் செயப்படுபொருள் 
வருவித்து அதனைக் ‘குரை கழல்கள் கூட்டுதி’ என்றதனோடு முடிக்க. 
    ஈடு :
ஒன்பதாம் பாட்டு. 2இவர் இவ்வுலக 
வாழ்வினை நினைத்தமையால் வந்த துன்பம் எல்லாம் தீரும்படி, திருநாட்டில் இருந்த இருப்பைக்காட்டியருள, 
‘கண்டு அனுபவிக்கப்பெற்றேன்,’ என்று மனம் நிறைவு பெற்றவர் ஆகிறார். 
    நின் குரைகழல்கள் 
கூட்டுதி - அறிவில்லாதவர்களாகவுமாம். நீ உகந்தாரை உன் திருவடிகளிலே சேர்த்துக் 
____________________________________________________ 
1. ‘விரோதிகளை அவனைப் 
பற்றியே போக்கிக்கொள்ளவேணும்’ என்பதற்குஆப்த சம்வாதம் காட்டுகிறார், ‘ஒரு குருவி’ என்று 
தொடங்கி.
 
2. ‘வேட்கையெல்லாம் 
விடுத்து, கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை’ என்றபதங்களைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
 |