முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
371

1உழக

1உழக்காலே அளக்குமாறு போன்று அளவிற்குட்பட்ட பொருள்களை அறியத் தக்கவைகளான இந்திரியங்களாலே அனுபவிக்கப்பட்ட இவ்வுலக இன்பம். 2ஆத்துமாவிற்கு ஞானம் நித்திய தர்மமாய், அதுதான் விபுவாயிருக்கக் கூடியது; இப்படி இருக்கச்செய்தேயும், கர்மம் காரணமாகக்குறைவுபட்டதாய், மனம் அடியாகப் புறப்பட்டு, புற இந்திரியங்கள் வழியாக விஷயங்களை அறியக் கூடியதாய் அன்றோ இருப்பது? ஆதலின், ‘ஐங்கருவி கண்ட இன்பம்’ என்கிறது. தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம் - இவ்வுலக அனுபவத்தைப் பற்றத் தான் தெரிவரியதாய், அவ்வுலகில் பகவத் அனுபவத்தைப் பற்றத் தான் முதன்மை இல்லாததாய், அணுவான ஆத்துமாவைப் பற்ற வருகிற இன்பமாகையாலே சொரூபத்தாலே அளவிற்குட்பட்டதாய் இருக்கிற ஆத்தும அனுபவசுகம். அந்தமில் பேரின்பத்திற்கு எதிர்த்தட்டானதாகையாலே ‘சிற்றின்பம்’ என்கிறது. ஒழிந்தேன் - இவற்றை விட்டேன்.

    ‘விட்டது இதுவாகில், பற்றியது எதனை?’ என்னில், அருளிச்செய்கிறார் மேல் : ஒண்தொடியாள் திருமகளும் நீயும் - தொடி என்பது, முன்கை வளை. அதற்கு ஒண்மையாவது, இவள் கையினின்று நீங்காதிருக்கை. 3எப்பொழுதும் சர்வேசுவரனை விட்டுப் பிரியாமல் இருப்பவளாகையாலே, முன்பு ஒருகால் கழன்று பின்பு பொறுக்கவேண்டும்படி இருப்பது இல்லையே அன்றோ? 4‘சங்கு தங்கு முன்கை நங்கை’ என்னக் கடவதன்றோ? ஆதலால், ‘ஒண்டொடியாள்’ என்கிறது; இப்படியிருக்கிற பிராட்டியும், 5அவள் தானுங்கூட ‘இறையும் அகலகில்லேன்’ என்றிருக்கிற

____________________________________________________

1. ‘ஐங்கருவி கண்ட இன்பம்’ என்கையாலே, அளவிற்குட்பட்ட இன்பம் என்பது
  சித்திக்கிறது என்னுமதனைத் திருஷ்டாந்தத்தோடு அருளிச்செய்கிறார்,
  ‘உழக்காலே’ என்று தொடங்கி.

2. ‘நித்தியமாயும் விபுவாயுமுள்ள தர்மபூதஞானமிருக்க, ‘இந்திரியங்களாலே
  அனுபவிக்கிற’ என்கிறது என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘ஆத்துமாவிற்கு’ என்று தொடங்கி. விபுவாய் - பரந்திருப்பதாய்.

3. ‘நீங்காமல் இருத்தலுக்குக் காரணம் என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘எப்பொழுதும்’ என்று தொடங்கி.

4. திருச்சந்த விருத். 57.

5. பிராட்டியை ‘ஒண்டொடியாள்’ என்று அடை கொடுத்து ஓதியவர்,
  பெருமானைக் குறிக்கும் போது அடைகொடாமல் ‘நீயும் என வாளா
  ஓதியதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘அவள் தானுங் கூட’ என்று
  தொடங்கி.