க
கிட்டினேன். இது நான்
உற்றது; கீழ்ச்சொன்னவை நான் விட்டவை.
‘நன்று; ‘ஒண்தொடியாள்
திருமகளும் நீயுமே’ என்ற அளவில், நித்தியவிபூதியில் அடியார்களுடன் இருக்கும் இருப்பைச்
சொல்லியது ஆமோ?’ என்னில், ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்றுகொலோ!’ என்று இவர்
சொல்லுகையாலும், ‘‘நித்தியர்களோடும் முத்தர்களோடுங்கூட’ என்று வேறு பிரமாணங்கள் உண்டாகையாலும்
சொல்லத் தட்டு இல்லை’ என்க. மேலும், ‘நிற்பனவும் திரிவனவும் நீயே மற்று ஒரு பொருளும் இன்றி’
என்று கூறிவைத்துக் ‘கொடு உலகம் காட்டேல்’ என்றதைப் போன்று, ‘அவர்கள் இருவருமே’ என்ற இடத்தில்,
அவர்கள் அபிமானத்திலே அடங்கிக் கிடப்பது ஒரு உலகம் உண்டாகச் சொல்லத் தட்டு இல்லையே அன்றோ?
அங்ஙனமாயின், பிராட்டியும் தானும் நித்தியசூரிகளுமாய் இருக்கிற அவ்வுலகம் இவ்வுலகம் ஆனாலோ?’
என்னில், 1தனக்கே உரிய விக்கிரஹத்தோடே, 2‘நீர் சீதா பிராட்டியாரோடுகூட’
என்கிறபடியே, தானும் பிராட்டியுமாய் இருந்து, 3‘இதனைச் செய்க’ என்று சொல்லுகிறபடியே,
இளைய பெருமாளை அடிமை கொண்டாற்போலே, இவரை அடிமை கொள்ளுவது ஒரு தேச விசேடமாகவே இருக்கவேண்டும்
அன்றோ?
(10)
431
திருவடியை நாரணனைக்
கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடிசேர்
வதுகருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடிமேல் உரைத்ததமிழ்
ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும்
திருவடிசேர்ந்து ஒன்றுமினே.
பொ-ரை :
‘திருவடியும் நாரணனும் கேசவனும் பரஞ்சுடருமான சர்வேசுவரனுடைய திருவடிகளை அடையவேண்டும் என்று நினைத்து,
செழுமை பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே, எம்பெருமானுடைய திருவடிகளின்மேலே
அருளிச்செய்யப்பட்ட தமிழ்ப்பாசுரங்கள் ஆயிரத்துள் இப்பத்துப்பாசுரங்களும்
____________________________________________________
1. ‘தனக்கேயுரிய விக்கிரஹத்தோடே’
என்பதனைப் பின் வருகின்ற ‘அடிமை
கொள்ளுவது’ என்ற சொற்றொடருடன் கூட்டுக.
2. ‘நீர் சீதா பிராட்டியாரோடு’
என்று தொடங்குவது, ஸ்ரீராமா. அயோத்.31-25.
3.
‘இதனைச் செய்க’ என்றது, ஸ்ரீராமா. அயோத்.
|