இச
இச்சரீரத்தை விடுவதற்குப்
பாரானாகில், அந்த மோக்ஷந்தான் இல்லை. மறுகல் இல் ஈசனை - குற்றங்கட்கு எதிர்த்தட்டான சர்வேசுவரனை,
அன்றிக்கே, 1‘மறுகலில் - மறுகுகிற சமயத்தில்; உயிர் நீங்குங்காலத்தில்
வருகின்ற கலக்கத்தில்’ என்னுதல். ஈசனைப் பற்றி விடாவிடில் - 2அந்திம
ஸ்மிருதி இல்லையாகில் ஆதி பரதனைப்போலே மான் ஆதல், மரை ஆதல் ஆமித்தனை. அஃதே வீடு -
‘திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று நான் சொல்லுகிற அதுவே
புருஷார்த்தம்.
(10)
343
அஃதே உய்யப்புகும்
ஆறுஎன்று கண்ணன் கழல்கள்மேல்
கொய்பூம் பொழில்சூழ்
குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம்
சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர்
ஆழ்துயர் போய்உய்யற் பாலரே.
பொ-ரை :
‘உய்வதற்கு உரிய வழி மேலே கூறிய அதுவே என்று கண்ணபிரானுடைய திருவடிகளின்மேலே, பறிக்கப்படுகின்ற
பூக்கள் நிறைந்த சோலையாற்சூழப்பட்ட திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அந்தரங்கக் கைங்கரிய
ரூபமாகச் செய்யப்பட்ட
_____________________________________________________
1. மறுகல் - கலக்கம். முன்னைய பொருளில், மறுகல் - குற்றம்.
2. ‘சர்வேசுவரனை நினைத்துச்
சரீரத்தை விடுதற்குப் பாரானாகில்’ என்றபடி.
‘அந்திம ஸ்மிருதி இல்லையாயின் வருவது ஏன்?’ என்ன,
அதற்கு விடை
‘ஆதி பரதனைப் போலே’ என்று தொடங்கும் வாக்கியம்.
“‘உயிர் உடம்பின் நீங்கும்
காலத்து அதனால் யாதொன்று
பாவிக்கப்பட்டது? அஃது அதுவாய்த் தோன்றும்,’ என்பது எல்லா
ஆகமங்கட்கும்
துணிபாகலின், வீடெய்துவார்க்கு அக்காலத்துப்
பிறப்பிற்கேதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப்
பொருளையே
பாவித்தல் வேண்டும்; அதனான், அதனை முன்னே பயிறலாய இதனின்
மிக்க உபாயமில்லை
என்பது அறிக.” என்ற பரிமேலழகருரை ஈண்டு ஒப்பு
நோக்கல் தகும்.
(குறள். 358.)
‘ஆதி பரதன் உயிர்
விடும்போது, தன்னால் வளர்க்கப்பட்ட
மானின்மேல் உள்ள பற்றுக்காரணமாக அந்த மானின் நினைவோடு
உயிரை
விட்டான்; ஆதலால், மானாய்ப் பிறந்தான்,’ என்பது சரிதம். இவன் எல்லாப்
பற்றையும்
விட்டுக் காட்டிற்குச் சென்று தவத்தைச் செய்தவன். ‘சர்வத்தையும்
விட்டுக் காட்டிலேயிருந்த
ஆதி பரதனுக்கு மானின் பக்கலிலே சங்கம்
உண்டாய் ஜ்ஞானபிரம்ஸம் பிறந்தது,’ என்பது ஈட்டு
வாக்கியம். அவதாரிகை
- முதல் ஸ்ரீய : பதி.
|