முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
393

பண

பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்று ஒரு நீராகப் பொருந்த வைத்தன்றோ கிடக்கின்றது?

    ‘ஆக, இப்படிகளிலே மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்துவ சங்கையை அறுத்து, எல்லாப் பொருள்களைக்காட்டிலும் உயர்ந்தவனாய் எல்லாப்பொருள்களையும் படைக்கின்றவனாய்க் கல்யாணகுணங்கள் எல்லாவற்றையுமுடையவனாய் எல்லாப் பொருள்களுக்கும் அந்தரியாமியாய் நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவனான சர்வேசுவரன் தன் பெருமைகள் எல்லாவற்றோடுங்கூடக் கண்களுக்குப் புலனாகும்படி திருநகரியிலே வந்து அண்மையிலே இருப்பவன் ஆனான்; அவனை அடைந்து எல்லாரும் பயன் பெற்றவர்களாகப் போமின்,’ என்று அருளிச்செய்கிறார்.

432

1ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்,

_____________________________________________________

1. ‘ஒன்றும் தேவும்’ என்ற இத்திருப்பதிகத்தில் திருமந்திரத்தின் பொருள்
  சொல்லப்படுகிறது, ‘யாங்ஙனம்? எனின், முதல் இரண்டு திருப்பாசுரங்களாலே
  காரணத்துவத்தையும், மூன்றாந்திருப்பாசுரத்தாலே இரட்சகத்துவத்தையும்,
  நான்காந்திருப்பாசுரத்தாலே சேஷித்துவ நிவர்த்தியையும், ஐந்தாம்
  பாசுரத்தாலே அந்நிய சேஷத்துவ நிவர்த்தியையும், ஆறாந்திருப்பாசுரத்தாலே
  நமஸ் சப்தார்த்தமான உபாயத்துவத்தையும், ஏழாந்திருப்பாசுரத்தில்
  ‘ஆடுபுட்கொடி யாதி மூர்த்தி’ என்கையாலே நாராயண பதத்திற்சொன்ன
  உபய விபூதி யோகத்தையும், எட்டாந்திருப்பாசுரத்தாலே நாராயண
  சப்தந்தன்னையும், ஒன்பதாந்திருப்பாசுரத்தாலே அவன் அடியார்க்கு
  அடிமைப்பட்டிருத்தலையும், பத்தாந்திருப்பாசுரத்தாலே கைங்கரியத்தையும்
  அருளிச்செய்திருத்தலால்,’ என்க.