New Page 1
கொண்டு, எல்லாப்பொருள்களையும்
படைத்தவனான சர்வேசுவரன், தாய் சந்நிதி ஒழியக் குழந்தை வளராதாப் போலே தன் சந்நிதி ஒழிய
இவை வாழமாட்டா என்று பார்த்துத் திருநகரியிலே மிக எளியனாய் நிற்க, ‘வேறே அடையக்கூடிய
பொருளும் ஒன்று உண்டு,’ என்று தேடித் திரிகின்றீர்கோளே!’ என்று நிந்திக்கிறார்.
தேவும் உலகும் உயிரும்
மற்றும் யாதும் ஒன்றும் இல்லா அன்று - தேவசாதியும் அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களும், மனிதர்கள்
முதலான உயிர்களும், அண்டத்திற்குக் காரணமான மகத்து முதலான தத்துவங்களும் இவை ஒன்றும் இல்லாத
அன்று’ என்னலுமாம்; 1அங்ஙன் அன்றிக்கே, ‘காரியத்துக்குக் காரணத்திலே இலயமாகச்
சொல்லுகையாலே, காரணனாய் இருக்கிற தன் பக்கலிலே சென்று ஒன்றுகின்ற தேவும் உலகும் உயிரும்
மற்றும் யாதும் இல்லா அன்று’ என்னவுமாம். ‘சத்து ஒன்றே இருந்தது’ என்னக்கடவது அன்றோ? நான்முகன்தன்னோடு
தேவர் உலகோடு உயிர் படைத்தான் - பிரமனோடுகூடத் தேவசாதியையும், அவர்களுக்கு இருப்பிடமான
உலகங்களையும் உயிர்களின் கூட்டத்தையும் படைத்தான்.
அன்றிக்கே,
‘பதினான்கு உலகங்களையும் படைத்த பிரமனோடு, அவனாலே படைக்கப்பட்டவர்களாய் நித்திய
சிருஷ்டிக்குக் கடவரான 2பிரஜாபதிகள் பதின்மரோடு, அவர்களுடைய இன்பத்திற்கு இடமான
உலகங்களோடு, அவர்களுக்குக் குடிமக்களான மனிதர்கள் முதலானவர்களோடு வாசியறப் படைத்தான்,’
என்னலுமாம். 3சர்வேசுவரன்
_____________________________________________________
1. ‘ஒன்றும்’ என்பதற்கு
இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்:
முன்னைய பொருளில் பெயர்ச்சொல்; பின்னைய
பொருளில் பெயரெச்சம்.
பின்னைய பொருளுக்கு மேற்கோள் - ‘சத்து ஒன்றே இருந்தது - சதேவ’
என்பது.
2. பிரஜாபதிகள் பதின்மர்
: - மரீசி, அத்திரி, அங்கிரசு, புலஸ்தியர், புலகர்,
கிரது, வசிஷ்டர், தக்ஷர், பிருகு, நாரதர்.
3. ‘பிரமன்’ என்னாது,
‘நான்முகன்’ என்கையாலே, ரசோக்தியாகச்
‘சர்வேசுவரன்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
இங்கு,
‘யத் தத் பத்மம்
அபூத் அபூர்வம் தத்ர பிரஹ்மா வியஜாயத
பிரஹ்மணஸ் சாபி
ஸம்புத: சிவ இதி அவதார்யதாம்
சிவாத் ஸ்கந்த:
சம்பபூவ ஏதத்சிருஷ்டி சதுஷ்டயம்’
என்ற பகுதி நினைத்தல் தகும்.
|