எள
எளிதில் ஆராதிக்கக்
கூடியவனுமாய் நல்நெறியையுடையவனுமான இவனை விட்டு, அடையத் தகாதவராய் அரியராய் அரிதில் ஆராதிக்கக்
கூடியவராய்த் தீ நெறியையுடையராய், வருந்தி ஆராதித்தாலும் 1சேட்டை
தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்குமாறு போலே பலிப்பதும் ஒன்று இன்றிக்கே இருக்கிற
2திருவில்லாத்தேவரைத் தேடி அடைவதற்குத் திரிகின்றீர்கோளே!’ என்று நிந்திக்கிறார்.
(1)
433
நாடிநீர் வணங்கும் தெய்வமும்
உம்மையும் முன்ப டைத்தான்
வீடில் சீர்ப்புகழ்
ஆதிப்பி ரான்அவன் மேவி உறைகோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழ
காய திருக்குரு கூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள்,
பல்லுல கீர்!ப ரந்தே.
பொ-ரை :
‘பல வகைப்பட்ட நாடுகளிலும் நகரங்களிலும் உள்ளவர்களே! நீங்கள் விரும்பி வணங்குகின்ற தெய்வங்களையும்
உங்களையும் ஆதி காலத்திலேயே படைத்தான், அழிதல் இல்லாத கல்யாண குணங்களையும் புகழையுமுடைய
ஆதிப்பிரான். அவன் மனம் விரும்பி வசிக்கின்ற கோயில், மாடங்களும் மாளிகைகளும் சூழ்ந்து
அழகு நிறைந்திருக்கின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தைப் பாடி ஆடித் துதித்துப் பரந்துசெல்லுங்கோள்,’
என்றவாறு.
வி-கு :
‘உலகீர்! நீர் திருக்குருகூரதனைப் பாடி ஆடிப் பரவிப் பரந்து சென்மின்,’ எனக் கூட்டுக. ‘படைத்தானாகிய
ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்’ என்க. ‘கோயிலாகிய திருக்குருகூர்’ என்க. அன்றி,
‘கோயிலையுடைய திருக்குருகூர்’ எனலுமாம்.
_____________________________________________________
1. ‘நாட்டினான் தெய்வம்
எங்கும், நல்லதோர் அருள்தன்னாலே
காட்டினான் திருவ ரங்கம்
உய்பவர்க்கு உய்யும் வண்ணம்;
கேட்டிரே நம்பு மீர்காள்!
கெருடவா கனனும் நிற்கச்
சேட்டைதன் மடிய கத்துச்
செல்வம்பார்த் திருக்கின் றீரே,’
திருமாலை, 10. சேட்டை
- மூதேவி.
2. ‘கல்லா தவரிலங்கை கட்டழித்த
காகுத்தன்
அல்லால் ஒருதெய்வம்
யானிலேன் ;- பொல்லாத
தேவரைத் தேவரல் லாரைத்
திருவில்லாத்
தேவரைத் தேறேன்மின்
தேவு.’
நான்முகன் திருவந்.
53.
|